ராஜேந்திர பாலாஜி எங்கு நின்றாலும் தோற்பார் – அதிமுக எம் எல் ஏ பேச்சால் சர்ச்சை!

Webdunia
செவ்வாய், 22 டிசம்பர் 2020 (11:34 IST)
அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எந்த தொகுதியில் நின்றாலும் தோற்பார் என அந்த கட்சியை சேர்ந்த எம் எல் ஏவே சொல்லியிருப்பது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

அதிமுகவின் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சமீப காலமாக சர்ச்சைக்குள்ளான பேச்சுக்களை பேசி வருகிறார். இதனால் சில மாதங்களுக்கு முன்னர், விருதுநகர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து ராஜேந்திர பாலாஜி விடுவிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னிர் செல்வம் கூட்டாக அறிவித்துள்ளனர்.  ஆனால் சில நாட்களிலேயே மீண்டும் அவருக்கு பதவி வழங்கப்பட்டது. இப்படி கட்சிக்குள் அவருக்கு எதிராக பல எதிர்ப்புகள் எழுந்தவண்ணம் உள்ளன.

இந்நிலையில் ராஜேந்திர பாலாஜியின் சொந்த மாவட்டமான விருதுநகரின் சாத்தூர் தொகுதி எம் எல் ஏ ராஜவர்மன்’ திமுகவுடன் மறைமுகக் கூட்டு வைத்துள்ளார் ராஜேந்திர பாலாஜி. ஏற்கனேவே விருதுநகரில் சில தொகுதிகளை திமுகவிடம் நாம் இழந்தோம். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எந்த தொகுதியில் நின்றாலும் ராஜேந்திர பாலாஜி வரும் தேர்தலில் தோற்பார்.’ என்று தெரிவித்துள்ளார்.  இந்த பேச்சு அதிமுக தொண்டர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக தங்கத்தையே கொடுத்தாலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்: செல்லூர் ராஜு

இருமுடி கட்டி போவாங்க! விஜய் ரசிகர் செய்த செயலால் கடுப்பான நெட்டிசன்கள்

கொல்கத்தா நிகழ்வின்போது ஏற்பட்ட குழப்பம்.. மெஸ்ஸியிடம் மம்தா பானர்ஜி வருத்தம்!

யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது: வீட்டின் கதவை உடைத்து கைது செய்ததாக தகவல்..!

கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் மெஸ்ஸி ரசிகர்கள் ரகளை: ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments