Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவில் இணைந்த அதிமுகவின் முக்கிய புள்ளி: அமைச்சர்கள் கடுப்பு!!

Webdunia
திங்கள், 24 பிப்ரவரி 2020 (11:59 IST)
அதிமுகவில் இருந்து விலகிய ராஜ கண்ணப்பன் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். 
 
முன்னரே சரும் 23 ஆம் தேதி திமுகவில் இணைய உள்ளதாக அறிவித்திருந்தார் ராஜ கண்ணப்பன். அதன்படியே மதுரையில் ஸ்டாலின் தலைமையில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு ராஜ கண்ணப்பன் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார்.
 
ஆனால், அதிமுக அமைச்சர்களான செல்லூர் ராஜூ, உதயகுமார் ஆகியோர் இந்த இணைப்பு குறித்து விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். செல்லூர் ராஜூ கூறியதாவது, ராஜ கண்ணப்பன் தமிழகத்தில் செல்லாத நோட்டாகிவிட்டார். அவர் முன்பு திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார். இப்போது அதிமுகவில் இருந்து செல்லாமல் போனதால் மீண்டும் திமுகவுக்குச் செல்கிறார். இதை திமுக பெரிய நிகழ்ச்சியாகக் கொண்டாடுகிறது என விமர்சித்தார். 
 
அதேபோல அமைச்சர் உதயகுமார், ராஜ கண்ணப்பனைப் பார்த்து எல்லோரும் பரிதாபப்படுகிறார்கள். மூழ்கும் கப்பலில் புதிய பயணியாக ராஜ கண்ணப்பன் சேர்ந்திருப்பது அந்தக் கப்பலுக்கும் ஆபத்து அவருக்கும் ஆபத்து என பேசியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

துணை பிரதமர் பதவி தறோம்..! இல்ல சபாநாயகர்தான் வேணும்! – அடம்பிடிக்கும் நிதிஸ், சந்திரபாபு! குழப்பத்தில் பாஜக?

இந்தியா கூட்டணிக்கு செல்ல மாட்டேன்.. சந்திரபாபு நாயுடு உறுதி..!

டெல்லியில் இன்று அடுத்தடுத்து நடக்கும் பாஜக மற்றும் இந்தியா கூட்டணிகளின் கூட்டம்: அவசர ஆலோசனை..!

தேர்தல் ரிசல்ட்டுக்கு பின் தங்கம் விலையில் ஏற்றமா? இறக்கமா? சென்னை விலை நிலவரம்..!

ராகுல் காந்தி பிரதமராக உத்தவ் தாக்கரே சிவசேனா ஆதரவு.. மற்றவர்களும் ஆதரவு கொடுப்பார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments