ரஜினி ஆதரவு குடுத்தா ஏத்துக்குவோம்! – முதல் ஆளாய் ரூட்டு போடும் அதிமுக?!

Webdunia
செவ்வாய், 29 டிசம்பர் 2020 (13:13 IST)
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கவில்லை என அறிவித்த நிலையில் அவர் ஆதரவு அளித்தால் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக அதிமுக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த கட்சி தொடங்குவதாக அறிவித்த நிலையில் உடல்நல குறைபாடு காரணமாக தற்போது ஓய்வில் உள்ளார். இந்நிலையில் தற்போது தான் உடல்நலம் காரணமாக கட்சி தொடங்க போவதில்லை என்றும், தொண்டர்கள் தன்னை மன்னிக்கும்படியும் ரஜினிகாந்த் அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது ரஜினி தனது கட்சி தொடங்கும் முடிவிலிருந்து விலகியுள்ளதால் தேர்தலில் அவரது ஆதரவை பெற அரசியல் கட்சிகள் சில திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது.

இந்நிலையில் ரஜினியின் முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் கடம்பூர் ராஜூ “ரஜினிகாந்த் முடிவு அரசியலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. இது அவரது தனிப்பட்ட முடிவு. அதேசமயம் தேர்தலில் அவரது ஆதரவை அதிமுகவிற்கு அளித்தால் ஏற்றுக் கொள்வோம்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக - தவெக இடையேதான் போட்டி! அதிமுகலாம் ரேஸ்ல இல்ல! - விஜய் பக்கம் சாயும் டிடிவி தினகரன்!

ஆசிம் முனீர் ஒரு மனநலமில்லாதவர்: இம்ரான்கான் திடுக்கிடும் குற்றச்சாட்டு..!

மகளிர் உரிமை தொகை கொடுப்பதால் வளர்ச்சி திட்டங்கள் பாதிக்கும்: ரிசர்வ் வங்கி எச்சரிக்கை..!

AI டெக்னாலஜிக்கு முழுக்க முழுக்க மாறப்போகும் IBM.. ஆயிரக்கணக்கோர் வேலைநீக்கம்?

இது பாகிஸ்தான் அல்ல, பீகார்.. புர்கா அணிந்து ஓட்டு போட பெண்கள் குறித்து மத்திய அமைச்சர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments