எங்க பக்கம் வந்துடுங்க; டீல் பேசிய பொன்னையன்? – சர்ச்சை ஆடியோ குறித்து விளக்கம்!

Webdunia
புதன், 13 ஜூலை 2022 (13:42 IST)
அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வருமாறு ஓபிஎஸ் ஆதரவாளர்களிடம் பொன்னையன் பேசியதாக வெளியான தகவல் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்களால் இடைக்கால பொதுசெயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இந்த பொதுக்குழுவே செல்லாது என ஓபிஎஸ் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. இதனால் ஏற்பட்ட மோதலில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கட்சி நிலவரம் குறித்து அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் ஓபிஎஸ் ஆதரவாளர் நாஞ்சில் கோலப்பனிடம் பேசியதாக வெளியான ஆடியோ அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி அணியை சேர்ந்த சி.வி.சண்முகம் “இந்த ஆடியோ குறித்து பொன்னையனிடம் கேட்டபோது அது தனது குரல் இல்லை என கூறியுள்ளார். அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் அது குறித்து அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றாலும் வயது மூப்பின் காரணமாக அவர் பேச விரும்பவில்லை” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஆர் பாலுவை நானே குறுக்கு விசாரணை செய்ய போகிறேன்: அண்ணாமலை பேட்டி..!

வங்கக்கடல் சுழற்சி: இன்று 16 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை; நாளையும் மழை பெய்யும்..!

கணவன், மனைவி, ஒன்றரை வயது குழந்தை ரயில்முன் பாய்ந்து தற்கொலை.. செய்தி கேட்ட பாட்டி மாரடைப்பால் மரணம்..!

செவிலியர்களின் பாலியல் துன்புறுத்தல் புகார்: எய்ம்ஸ் டாக்டர் சஸ்பெண்ட்..!

ஆர்.எஸ்.எஸ்ஸும் தலிபானும் ஒரே மனநிலை: சித்தராமையாவின் மகன் சர்ச்சை பேச்சு; கொந்தளிக்கும் பா.ஜ.க!

அடுத்த கட்டுரையில்
Show comments