Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக தேர்தல் அறிக்கை: செல்போன், மடிகணினி, மின்சாரம் இலவசம்

Webdunia
வியாழன், 5 மே 2016 (18:38 IST)
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அதிமுக தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டார். இதன் முதல் பிரதியை தம்பிதுரை பெற்றார். இதில் பல இலவச அறிவிப்புகளையும், அதிரடி கவர்ச்சியான திட்டங்களையும் அறிவித்துள்ளனர்.


 
 
தேர்தல் அறிக்கையின் முக்கிய தகவல்கள்:-
 
* மகளிருக்கு ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டு ஆட்டோக்கள் வாங்க மானியம் வழங்கப்படும்.
 
* லோக் ஆயுக்தா அமைக்கப்படும்.
 
* முல்லைப்பெரியார் அனையின் நீர்மட்டம் 152அடியாக உயர்த்தப்படும்.
 
* தாதுமணல் விற்பனையை அரசே ஏற்கும்.
 
* தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் இனி காலை சிற்றுண்டியும் வழங்கப்படும்.
 
* மகளிருக்கு ஸ்கூட்டர் வாங்க 50% மானியம் வழங்கப்படும்.
 
* வழக்கறிஞர் சேமநல நிதி 7 லட்சமாக உயர்த்தப்படும்.
 
* தாலிக்கு தங்கம் இனி 4 கிராமிலிருந்து ஒரு சவரனாக வழங்கப்படும்.
 
* குடும்ப அட்டை தாரர்கள் அனைவருக்கும் இலவச செல்போன்.
 
* புதிய கிரானைட் கொள்கை வகுக்கப்படும்.
 
* கேபிள்டிவி செட்டாப் பாக்ஸ் இலவசம்
 
* மடிக்கணினியுடன் கட்டணமில்லா இணைய வசதி வழங்கப்படும்.
 
* விவசாயிகளுக்கு முழுவட்டி மானியம் தொடர்ந்து வழங்கப்படும்.
 
* மகப்பேறு உதவித்தொகை ரூ. 18,000 ஆக உயர்த்தப்படும்.
 
* குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்.
 
* பொங்கல் திருநாளுக்கு கோ-ஆப்டெக்ஸில் துணி வாங்க ரூ.500 கூப்பன் வழங்கப்படும்.
 
* 100 யூனிட் மின்சாரத்திற்கு கட்டணமில்லை.
 
* மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
 
* 2016-2021 காலக்கட்டங்களில் 40000கோடி வரை பயிர்கடன்கள் வழங்கப்படும்.
 
* அத்திக்கடவு அவினாசி திட்டம் செயல்படுத்தப்படும்.
 
* தமிழ்நாட்டில் சில்லறை வியாபாரத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கமாட்டோம்.
 
* விவசாயிகளின் கடன் முழுவதும் ரத்து செய்யப்படும்.
 
* சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரபதிவு எளிமையாக்கப்படும்.
 
* மீனவர் நிவாரண தொகை ரூ.5000-ஆக உயர்த்தப்படும்.
 
* மீனவர்களுக்கு தனி வீடு கட்டும் திட்டம்.
 
* காவேரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
 
* மகப்பேறு உதவிதொகை ரூ.18000-ஆக உயர்த்தப்படும்.
 
* உள்நாட்டின் மீன் உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம்
 
* மின்பதன பூங்காக்கள் அமைக்க தொடரந்து நடவடிக்கை எடுக்கப்படும்
 
* புதிய சாலைகள் அமைக்கப்படும். சாலைகள் விரிவாக்கம் செய்யப்படும்.
 
* பள்ளிக்கல்வி மேம்படுத்தப்படும்
 
* ஏழை, எளிய மக்களுக்கு அரசின் அனைத்து சேவைகளையும் பெறுவதற்காக அம்மா பேங்கிங் கார்டு.
 
* சிறுவர், சிறுமியருக்கு வைட்டமின் சி மாத்திரை.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments