நேர்காணல் ஒரே கட்டம்.. வேட்பாளர் அறிவிப்பு ரெண்டு கட்டம்!? – அடுத்த கட்டத்திற்கு நகரும் அதிமுக!

Webdunia
வெள்ளி, 5 மார்ச் 2021 (10:47 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேட்பாளர் நேர்காணல் நடத்திய அதிமுக வேட்பாளர் பட்டியலை தயார் செய்து வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக விருப்ப மனு அளிக்க கடைசி தேதி மார்ச் 5 என அறிவித்திருந்த நிலையில் அதை மார்ச் 3 ஆக குறைத்தது. இந்நிலையில் நேற்று விருப்ப மனு அளித்த அனைத்து உறுப்பினர்களிடமும் ஒரே நாளில் நேர்காணலை நடத்தி முடித்துள்ளது அதிமுக.

தேர்தலுக்கு ஒரு மாத காலமே உள்ள நிலையில் வேட்பாளர் பட்டியலை தயாரிப்பதில் அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் மாவட்ட வாரியாக வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க மாவட்ட செயலாளர்களுடன் அதிமுக ஆட்சிமன்ற குழு ஆலோசனை நடத்தி வருகிறது. அதை தொடர்ந்து 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்கள் பட்டியல் இரண்டு கட்டமாக அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கமல்ஹாசன் கட்சியின் டார்ச் லைட் சின்னத்திற்கு திடீர் சிக்கல்.. என்ன காரணம்?

நெல்லை தொகுதியில் மீண்டும் போட்டியிடும் நயினார் நாகேந்திரன்? அவரே அளித்த பதில்..!

அருமை அண்ணன் எடப்பாடி பழனிசாமி.. எங்களை பார்த்தால் பாவமாக இல்லையா? ஓபிஎஸ் பேட்டி

சென்னை நந்தனம் கல்லுரியில் பெண் பாலியல் பலாத்காரம்!.. 3 பேர் கைது!...

நான் எம்.பி ஆவது முக்கியமல்ல!.. எல்லாம் உங்களுக்காகதான்!.. விஜய பிரபாகரன் ஃபீலிங்!...

அடுத்த கட்டுரையில்
Show comments