மோடி உண்ணாவிரதத்திற்கு அதிமுகவே காரணம்: அமைச்சர் கடம்பூர் ராஜூ

Webdunia
புதன், 11 ஏப்ரல் 2018 (16:04 IST)
நடைபெற்று முடிந்த பாராளுமன்ற கூட்டத்தொடர் முழுவதையும் நடத்தவிடாமல் எதிர்க்கட்சிகள் அமளி செய்ததற்கு கண்டனம் தெரிவித்து பிரதமர் மோடி நாளை உண்ணாவிரதம் இருக்கவுள்ளார். இருப்பினும் அவர் தன்னுடைய வழக்கமான அலுவல்களள கவனிப்பார் என்று கூறப்பட்டது.
 
இந்த உண்ணாவிரதம் குறித்து கருத்து கூறிய தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ, 'அ.தி.மு.க.வினரின் போராட்டத்தினால் பிரதமர் மோடி உண்ணாவிரதம் இருக்கிறார்' என்று கூறினார். மேலும் அவர் இதுகுறித்து கூறியபோது, 'நாடாளுமன்றத்தில் அதிமுக எம்பிக்கள் நடத்திய போராட்டத்தினால் தான் இரு அவைகளும் முடங்கியது.  அதனால் தான் பிரதமர் நரேந்திர மோடி நாளை உண்ணாவிரதம் மேற்கொள்கிறார் என கூறியுள்ளார்.
 
பாராளுமன்ற கூட்டம் தொடங்கிய நாள் முதல் அ.தி.மு.க. எம்.பி.க்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பதும் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டு கோஷங்களையும் எழுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட்டியில் தொகுப்பாளருடன் கட்டிப்பிடி சண்டை போட்ட ராம்தேவ்!.. வீடியோவால் பரபரப்பு!...

SIR: 97 லட்சம் பெயர்கள் நீக்கம்!.. முதல்வர் ஸ்டாலின் நெக்ஸ்ட் மூவ் என்ன?...

மேற்குவங்கத்திற்கு செல்ல முடியாமல் திடீரென திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்.. என்ன காரணம்?

விமானத்தில் சிகரெட் பிடித்த பாகிஸ்தான் ஹாக்கி அணி மேனேஜர்.. பாதியில் இறக்கிவிட்டதால் பரபரப்பு..!

பெற்ற அப்பாவுக்கே இந்த நிலையா?..இன்சூரன்ஸ் பணத்திற்காக பாம்பை வைத்து தந்தையை கொன்ற மகன்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments