Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீங்க நல்லா வருவீங்க: 50 மா.செவுக்கு பூட்ஸ் கொடுத்த ஜெயலலிதா

நீங்க நல்லா வருவீங்க: 50 மா.செவுக்கு பூட்ஸ் கொடுத்த ஜெயலலிதா
, திங்கள், 12 அக்டோபர் 2015 (23:32 IST)
அதிமுகவின் புதிய மாவட்டச் செயலாளர்கள், அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவிடம் ஆசி பெற்றனர்.
 

 
தமிழகத்தில், கட்சி வளர்ச்சியை கருத்தில் கொண்டு 50 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த 50 மாவட்டங்களுக்கும், புதிய மாவட்ட செயலாளர்களை முதல்வர் ஜெயலலிதா கடந்த 7 ஆம் தேதி அறிவித்தார்.
 
இந்த நிலையில், முதல்வர் ஜெயலலிதாவை அதிமுகவின் 50 புதிய மாவட்ட செயலாளர்கள் சந்தித்து ஆசி பெற்றனர். புதிய மாவட்ட செயலாளர்களுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்த முதலமைச்சர் ஜெயலலிதா பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். குறிப்பாக, கட்சி வளர்ச்சி, தேர்தலில் காட்ட வேண்டிய அக்கறை குறித்து அறிவுரை வழங்கி, நீங்க நல்லா வருவீங்க என பூட்ஸ் கொடுத்துள்ளார்.
 
முதல்வர் ஜெயலலிதாவின் இந்த பூஸ்ட் புதிய அதிமுக மா.செ.களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. 
 

Share this Story:

Follow Webdunia tamil