தொடர்ந்து சசிக்கலாவுடன் போனில் பேசும் அதிமுகவினர்! – 5 பேரை நீக்கி அதிமுக உத்தரவு

Webdunia
வியாழன், 24 ஜூன் 2021 (11:53 IST)
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சசிக்கலாவுடன் தொடர்ந்து போனில் பலர் பேசி வரும் நிலையில் 5 பேரை கட்சியை விட்டு நீக்கி அதிமுக உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்த அதிமுக எதிர்கட்சியாக நீடித்து வருகிறது. இந்நிலையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சசிக்கலா தான் மீண்டும் வந்து அதிமுகவை மீட்க உள்ளதாக அதிமுக தொண்டர்கள் பலரிடம் செல்போன் வழியாக பேசி வரும் ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சசிக்கலாவுக்கு ஆதரவாக செயல்பட்ட 15 பேரை நீக்கி ஈபிஎஸ்-ஓபிஎஸ் உத்தரவிட்டனர். ஆனால் அதன்பிறகும் கூட சசிக்கலா அதிமுகவினரோடு பேசும் வீடியோக்கள் வெளியாகி வந்தது.

இந்நிலையில் தற்போது கூட்டாக அறிவிப்பு வெளியிட்டுள்ள ஈபிஎஸ் – ஓபிஎஸ் சேலம், சிவகங்கை மற்றும் திருநெல்வேலியை சேர்ந்த 5 அதிமுக பிரமுகர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளனர். தொடர்ந்து பலர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் மேக வெடிப்பா? ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் அமுதா விளக்கம்..!

உலகின் மிகப்பெரிய லூவ்ரே அருங்காட்சியகத்தில் பயங்கர கொள்ளை: மன்னர் நெப்போலியன் நகைகள் திருட்டு!

சென்னை, மதுரை உட்பட 29 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு! வானிலை எச்சரிக்கை..!

நட்சத்திர விடுதியில் 19 வயது இளைஞன் வைத்த மதுவிருந்து.. தொழிலதிபர் அப்பாவை கைது செய்த போலீசார்.

டிரம்ப் எங்களுக்கு அதிபராக வேண்டும்.. வீதியில் இறங்கிய போராடும் அமெரிக்க மக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments