Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடங்காப்பிடாரி குரங்குகள்: சட்டசபையில் எதிரொலித்த அதிமுக சண்டை!

அடங்காப்பிடாரி குரங்குகள்: சட்டசபையில் எதிரொலித்த அதிமுக சண்டை!

Webdunia
புதன், 21 ஜூன் 2017 (15:03 IST)
ஜெயலலிதா இருந்த போது ராணுவ கட்டுப்பாடோடு இருந்த அதிமுக தற்போது எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி, தினகரன் அணி என சிதறி கிடக்கின்றன. அதிமுகவில் ஏற்பட்டுள்ள இந்த பிளவு நேற்று சட்டசபையிலும் எதிரொலித்தது. ஆனால் அது கடைசியில் சிரிப்பலையில் முடிந்தது.


 
 
கடந்த மார்ச் மாதம் 24-ஆம் தேதி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 14-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது. ஜூலை 19-ஆம் தேதி வரை இந்த கூட்டம் நடைபெறுகிறது. மொத்தம் 24 நாட்கள் சட்டசபை கூட்டம் நடைபெறும்.
 
இதில் நேற்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் மதுரை மேலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பெரிய புல்லான் பேசிய போது, என்னுடைய தொகுதியில் குரங்குகள் தொல்லை தாங்க முடியவில்லை. குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. அந்த அடங்காப்பிடாரி குரங்குகளை அமைச்சர்தான் அடக்க வேண்டும் என்றார்.
 
இதற்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதிலளித்த போது, காட்டுக்குள் மட்டுமா குரங்குகள் அட்டகாசம் செய்கின்றன. இங்கும் சில அடங்காப்பிடாரி குரங்குகள் இருக்கின்றன என அதிருப்தி எம்எல்ஏக்களை குறிவைத்துச் பேசினார். இதனை புரிந்துகொண்ட அதிமுக எம்எல்ஏக்கள் சிரிப்பலையில் மூழ்கினர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments