Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தயாரானது அதிமுக தேர்தல் அறிக்கை – விரைவில் வெளியீடு

Webdunia
வெள்ளி, 8 மார்ச் 2019 (16:51 IST)
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக தனது தேர்தல் அறிக்கையை தயார் செய்து முடித்துள்ளது.

மக்களவைத் தேர்தல் தேதி எந்நேரமும் அறிவிக்கப்படலாம் என்ற சூழ்நிலை நாடு முழுவதும் நிலவி வருகிறது. தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் தங்கள் கூட்டணிகளை உறுதி செய்து தொகுதிப் பங்கீட்டையும் முடித்துள்ளனர். இதனை அடுத்து அதிமுக அரசு தனது தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியை கடந்த மாதம் தொடங்கியது.

இதற்காக முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், நத்தம் விஸ்வநாதன் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் அதற்கானப் பணியில் ஈடுபட்டு வந்தனர். இப்போது பணிகள் முழுவதும் முடிந்து அறிக்கை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியிடமும் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தின் தற்போதைய பிரச்சனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட்உள்ளதாகத் தெரிகிறது. திருத்தங்கள் எதுவும் இருப்பின் அவை சரி செய்யப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உன் கணவன் விந்தில் விஷம் இருக்கு.. என்னோடு உடலுறவு கொண்டால்?! - மதபோதகரின் சில்மிஷ முயற்சி!

பல மாதங்களுக்கு பின் பொதுவெளிக்கு வந்த காமெனி.. கொல்லப்பட்டதாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி..!

பாமக நிர்வாக குழுவிலிருந்து அன்புமணி நீக்கம்! ட்விஸ்ட் வைத்த ராமதாஸ்! - அன்புமணி அடுத்த மூவ் என்ன?

காதலிக்க மறுத்த ஆசிரியை! கொன்று தாலிக் கட்டி செல்ஃபி எடுத்த கொடூரன்!

11.50 லட்சம் சாதாரண மீட்டர்கள் வாங்கும் பணியை மின் வாரியம்.. ஸ்மார்ட் மீட்டர் திட்டம் என்ன ஆச்சு?

அடுத்த கட்டுரையில்
Show comments