Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விழுப்புரத்தில் சிறுமி எரித்து கொல்லப்பட்ட வழக்கு: இருவரை கட்சியிலிருந்து நீக்கயது அதிமுக

Webdunia
திங்கள், 11 மே 2020 (18:37 IST)
விழுப்புரத்தில் சிறுமி எரித்து கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய இருவரை கட்சியிலிருந்து அதிரடியாக அதிமுக தலைமை நீக்கியுள்ளது. இதுகுறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
கழகத்தின்‌ கொள்கை-குறிக்கோள்களுக்கும்‌ கோட்பாடுகளுக்கும்‌ முரணான வகையில்‌ செயல்பட்டதாலும்‌, கழகத்தின்‌ கண்ணியத்திற்கு மாசு ஏற்படும்‌ வகையில்‌ நடந்து கொண்டதாலும்‌, கழகக்‌ கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும்‌ அவப்‌பெயரும்‌ உண்டாகும்‌ விதத்தில்‌ செயல்பட்ட காரணத்தினாலும்‌, விழுப்புரம்‌ தெற்கு மாவட்டம்‌, திருவெண்ணெய்நல்லூர்‌ ஒன்றியத்தைச்‌ சேர்ந்த, திரு. 6 கலியபெருமாள்‌, ( சிறுமதுரை புதுக்காலனி கிளைக்‌ கழகச்‌ செயலாளர்‌ ) திரு. 6. முருகன்‌, ( சிறுமதுரை காலனி கிளைக்‌ கழக மேலமைப்புப்‌ பிரதிநிதி ) ஆகியோர்‌ இன்று முதல்‌ கழகத்தின்‌ அடிப்படை உறுப்பினர்‌ பொறுப்பு உட்பட அனைத்துப்‌ பொறுப்புகளில்‌ இருந்தும்‌ நீக்கி வைக்கப்படுகிறார்கள்‌. கழக உடன்பிறப்புகள்‌ யாரும்‌ இவர்களுடன்‌ எவ்விதத்‌ தொடர்பும்‌ வைத்துக்கொள்ளக்‌கூடாது எனக்‌ கேட்டுக்கொள்கிறோம்‌.
 
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கி செயலியை ஓப்பன் செய்யும்போது அருகில் இருப்பவர்கள் பார்க்க முடியாது: சாம்சங் புதிய மாடலில் அற்புதம்..!

திருமண நிகழ்ச்சியில் மேடையில் நடனமாடிய பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. சோகமான திருமண விழா..!

5 நிமிடத்தில் ஆட்டோ என்ற தவறான விளம்பரம்: ரேபிடோவுக்கு ரூ.10 லட்சம் அபராதம்..!

பிரதமர், முதல்வர்கள் பதவிப்பறிப்பு மசோதாவுக்கு சசிதரூர் ஆதரவு.. காங்கிரஸ் எதிர்ப்பு..!

ஆசிரியை காதலிக்க மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற 18 வயது மாணவர்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments