Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொன்னா கேக்கல.. சுயேட்சையாக போட்டி! – அடித்து தூக்கிய அதிமுக!

Webdunia
புதன், 16 பிப்ரவரி 2022 (11:35 IST)
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் சீட்டு கிடைக்காததால் சுயேட்சையாக போட்டியிட்டவர்களை அதிமுக கட்சியிலிருந்து நீக்கியுள்ளது.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியான நிலையில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது.

அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளில் பலர் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விருப்ப மனு அளித்திருந்த நிலையில் சிலர் தேர்ந்தெடுக்கப்படாததால் பல பகுதிகளில் சுயேட்சையாகவும் சொந்த கட்சி வேட்பாளரை எதிர்த்து போட்டியிடுகின்றனர்.

தேர்தலில் அதிமுக சார்பில் சீட்டு கிடைக்காததால் அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராக சுயேட்சையாக போட்டியிட்ட அதிமுக உறுப்பினர்களை கட்சியை விட்டு நீக்கியுள்ளதாக அதிமுக அதிரடியா அறிவித்துள்ளது. முன்னதாக இதே விவகாரம் தொடர்பாக திமுக 19 உறுப்பினர்களை நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஆடி காா்த்திகை விரதம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு.. குவிந்த பக்தர்கள்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. சென்னை உள்பட 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சேலத்தில் தவெகவின் முதல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்: தேதி அறிவிப்பு..!

தீர்ப்புகள் தயாரிக்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தலாமா? கேரள உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

துணை முதல்வர் நயினார் நாகேந்திரன்.. மேடையில் அறிவித்த பெண் பாஜக தொண்டரால் சலசலப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments