Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனிமொழியும், ராஜாவும் உல்லாச பயணத்துக்கா போனாங்க: தீரனின் தரம் தாழ்ந்த பேச்சு! (வீடியோ இணைப்பு)

கனிமொழியும், ராஜாவும் உல்லாச பயணத்துக்கா போனாங்க: தீரனின் தரம் தாழ்ந்த பேச்சு! (வீடியோ இணைப்பு)

Webdunia
ஞாயிறு, 26 மார்ச் 2017 (16:32 IST)
ஆர்கே நகரில் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெற உள்ளதால் தொலைக்காட்சிகளில் அது சம்பந்தமாகவே விவாத நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அது போன்ற ஒரு விவாத நிகழ்ச்சியில் அதிமுகவின் சசிகலா அணியை சேர்ந்த பேராசிரியர் தீரன் பேசியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 
 
தமிழக மக்கள் பார்த்துக்கொண்டிருந்த நேரலை விவாத நிகழ்ச்சியில் அதிமுக சசிகலா அணியை சேர்ந்த தீரனும், திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் சிவ ஜெயராஜும் கடுமையாக வார்த்தையால் மோதிக்கொண்டனர். இதில் ஒருவரை ஒருவர் ஒருமையில் திட்டிக்கொண்டது அரங்கத்தையே அதிர வைத்தது.
 
மக்கள் நேரலையில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இருவரும் ஒரு நிமிடம் அமைதியாக இருங்கள் என நிகழ்ச்சி நெறியாளர் அறிவுறுத்தியும் இருவரும் சண்டையிட்டவாறே இருந்தனர்.

 

 
 
தீரன் பேசிய வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

இந்த விவாதத்தின் போது தீரன் திமுக கட்சியை தில்லுமுல்லு கட்சி என குறிப்பிட அதற்கு திமுகவை சேர்ந்த சிவ ஜெயராஜ் திருடிக்கிட்டு ஜெயிலுக்கு போனவங்கள கட்சி தலைமையா வச்சிருக்கீங்க என பதிலுக்கு பேசினார்.
 
இதனால் ஆத்திரமுற்றர் பேராசிரியர் தீரன். கனிமொழியும், ராஜாவும் உல்லாசப்பயணத்துக்கா போனாங்க என மிகவும் தரம் தாழ்ந்து பேசினார். இதனால் இருவருக்கும் இடையே அரங்கத்தில் கடும் சொற்போர் நடைபெற்றது. தனிப்பட்ட தாக்குதல் வேண்டாம் என இருவரையும் நெறியாளர் சமாதனப்படுத்தியும் இருவரும் சண்டையிட்டவாறே ஒருமையில் பேசியவாரே இருந்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

உண்டியலில் விழுந்த ஐஃபோன் முருகனுக்கே சொந்தம்! பக்தருக்கு அதிர்ச்சி கொடுத்த கோவில் நிர்வாகம்!

நெல்லை நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் படுகொலை..சட்டம் - ஒழுங்கு எங்கே.. அன்புமணி கேள்வி..!

செந்தில் பாலாஜி வழக்கில் தமிழக அரசிடம் இருந்து பதில் வரவில்லை: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி

அடுத்த கட்டுரையில்
Show comments