Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுக் கடைகளை திறந்தால் ஸ்டாலினுக்கு எதிராக போராட்டம் செய்த அதிமுகவினர்: பெரும் பரபரப்பு

Webdunia
திங்கள், 25 மே 2020 (17:48 IST)
மதுக் கடைகளை திறந்தால் ஸ்டாலினுக்கு எதிராக போராட்டம் செய்த அதிமுக
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறந்த போது ஸ்டாலின் கருப்புக்கொடி காட்டி அவரது வீட்டு முன் தனது குடும்பத்தினருடன் போராட்டம் செய்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று முதல் திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி செய்யும் புதுவையில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதனையடுத்து அங்கு கூடிய அதிமுகவினர் ஸ்டாலினுக்கு எதிராக போராட்டம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டபோது கண்டனம் தெரிவித்த முக ஸ்டாலின் தனது கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் புதுவையில் மதுக்கடைகள் திறந்தபோது எந்த விதமான எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மதுக்கடைகளை திறந்ததை கண்டிக்காததை கண்டித்து முக ஸ்டாலினுக்கு எதிராக அதிமுகவினர் கருப்புக்கொடி மற்றும் கருப்பு பலூன்களை கையிலேந்தி போராட்டம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
 
இதனை அடுத்து மதுக்கடைகள் திறப்பதை அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுமே மனதளவில் எதிர்ப்பது இல்லை என்றும் அரசியலுக்காக மட்டுமே எதிர்ப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

சாமிக்கு ஆரத்தி எடுப்பதில் பூசாரிகளுக்குள் சண்டை.. கத்திக்குத்தால் ஒருவர் கொலை..!

கோடையில் மின்வெட்டு வராது.. அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதிமொழி..!

தமிழ்நாட்டில் தினமும் 5 கொலைகள்: இது தான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணமா? அன்புமணி

தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.. தமிழக அரசின் அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments