ஒரு ஓட்டுக் கூட வாங்காத அதிமுக வேட்பாளர்! – அதிர்ச்சியில் அதிமுக!

Webdunia
செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (14:51 IST)
நகர்புற உள்ளாட்சி தேர்வு முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் அதிமுக வேட்பாளர் ஒருவர் ஒரு ஓட்டுக் கூட பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள், அதிமுக, பாமக, பாஜக, மநீம, நாதக, விஜய் மக்கள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன. தற்போது உள்ளாட்சி தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சி 7வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்டவர் முகமது இப்ராம்சா. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியான நிலையில் இப்ராம்சாவுக்கு ஒரு வாக்குக்கூட கிடைக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்ராம்சாவும், அவரது குடும்பத்தினரும் அதே வார்டை சேர்ந்தவர்கள் எனும்போது இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையம் பதில் மனு..!

திருமணமான சில மணி நேரத்தில் மணமகன் பரிதாப மரணம்.. மணமக்கள் வீட்டார் அதிர்ச்சி..!

மெரினா கடற்கரைக்குச் செல்லத் தடை நீட்டிப்பு: மோசமான வானிலை காரணமாக நடவடிக்கை!

புயலால் இலங்கையில் சிக்கி தவித்த இந்தியர்கள்.. அதிரடியாக மீட்ட இந்திய விமானப்படை..!

சிலிண்டர் விலை 10 ரூபாய்க்கும் மேல் குறைவு.. வழக்கம்போல் வீட்டு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments