Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக - அதிமுக கூட்டணி ப்ரேக் அப்? ஹிண்ட் கொடுக்கும் மூத்த தலைகள்!!

Webdunia
வெள்ளி, 14 ஜூன் 2019 (12:06 IST)
உள்ளாட்சி தேர்தலுக்கு பாஜக - அதிமுக கூட்டணி அமைக்குமா என்பதுதான் தற்போதைய ஹாட் டாப்பிக்காக உள்ளது. 
 
தமிழகத்தில் பாஜக, அதிமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள்  கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. மெகா கூட்டணியுடன் தேர்தலை சந்தித்த அதிமுக ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. 
 
எனவே, பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் அதிமுக தோல்வியை சந்தித்ததாக அதிமுகவினரே வெளிப்படையாக பேச துவங்கிவிட்டனர். இந்நிலையில் இது குறித்து பேசி பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், கூட்டணி தோல்விக்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். அனாதை பிள்ளைக்கு அப்பன் யாரென்று தேடக்கூடாது என விமர்சித்தார். 
அதனை தொடர்ந்து தேர்தல் அறிவித்தவுடன் பாஜக அதிமுக கூட்டணி குறித்து அறிவிக்கப்படும். கூட்டணி தொடருமா, தொடராதா என்பதை நான் சொல்ல மாட்டேன் என தெரிவித்தார். 
 
இவர் இப்படி சொல்ல தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அனைத்து நேரங்களிலும் கட்சிகள் கூட்டணியாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. தேர்தல் நேரத்தில் அமைக்கப்படுவதுதான் கூட்டணி. 
மத்திய மாநில அரசுகள் நட்புணர்வோடு இருக்கின்றன. மத்திய மாநில அரசுகள் நட்புறவோடு இருக்கும் காரணத்தால் தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்கள் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். 
 
அப்படியென்றால் இந்த உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது, பாஜக - அதிமுக கூட்டணி நிலைக்குமா? நிலைக்காதா என தெரியவரும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செலவு கோடி ரூவாப்பே.. ஆனால் கோவில் நிலையோ பரிதாபம்! - காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தடை!

வருஷம் 3 கோடி சம்பளம்.. வீடு, கார் சகல வசதிகளும்..! ஆனா யாரும் வரமாட்றாங்க! - ஆஸ்திரேலியாவில் ஒரு விநோத பகுதி!

ராம்குமார் கடனை என்னால் தர முடியாது.. நீதிமன்றத்தில் மறுப்பு தெரிவித்த சிவாஜி மகன் பிரபு..!

மருதமலை முருகன் கோவில் வெள்ளிவேல் திருடு போகவில்லை: நிர்வாகம் விளக்கம்..!

வக்பு நிலத்தை அபகரித்தாரா கார்கே.. மாநிலங்களவையில் கடும் வாக்குவாதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments