Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகர்புற உள்ளாட்சி தேர்தல்; அதிமுக விருப்பமனு தேதி அறிவிப்பு!

Webdunia
வியாழன், 25 நவம்பர் 2021 (11:04 IST)
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அதிமுக விருப்ப மனு அளிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் அடுத்ததாக நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அரசியல் கட்சிகளும் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன. உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்து நேற்று அதிமுக அலுவலகத்தில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் தலைமையில் ஆலோசனை குழு நடத்தப்பட்டது.

இந்நிலையில் தற்போது உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வழங்கலாம் என அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது. நவம்பர் 26 முதல் 28 வரை விருப்ப மனுக்களை வழங்கலாம் என்றும், விண்ணப்ப கட்டணங்கள் பேரூராட்சிக்கு 1,500, நகராட்சிகளுக்கு 2,500, மாநகராட்சிக்கு 5,000 என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேவையில்லாமல் வதந்தி கிளப்ப வேண்டாம்.. இத்துடன் விட்டுவிடுங்கள்: கவின் காதலி

வெள்ளை மாளிகையில் ஒரு கோமாளி தலைவராக இருக்கிறார்: ஒவைசி கடும் விமர்சனம்..!

முதல்முறையாக அந்தமானில் அமலாக்கத்துறை ரெய்டு.. ரூ.200 கோடி மோசடி கண்டுபிடிப்பு..!

நான் சாக போகிறேன், இல்லையேல் அவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள்.. வரதடசணை கொடுமையால் கர்ப்பிணி தற்கொலை..!

நடிகை ராதிகாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. சென்னை மருத்துவமனையில் அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments