‘திமுகவும் அதிமுகவும் அண்ணன், தம்பிதான்’: ஓ பன்னீர்செல்வம்

Webdunia
செவ்வாய், 8 நவம்பர் 2022 (14:35 IST)
திமுகவும் அதிமுகவும் அண்ணன் தம்பிகள் தான் என முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பல கேள்விகளுக்கு பதிலளித்தார் அப்போது திமுகவை எதிர்ப்பதற்காக டிடிவி தினகரன் கூறிய யோசனையை தான் ஏற்றுக்கொள்வதாகவும் திமுகவுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார் 
 
மேலும் டிடிவி தினகரனை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன் என்றும் அதேபோல் பிரதமர் தமிழகம் வரும்போதும் சந்திப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்
 
மேலும் திமுகவும் அதிமுகவும் அண்ணன் தம்பி இயக்கம் தான் என்றும் ஆனால் நாங்கள் மாறுபட்ட பாதையில் சென்று கொண்டு இருக்கிறோம் என்றும் எங்கள் பாதை எம்ஜிஆர் வகுத்த பாதை என்றும் திமுக அவர்கள் பாதையில் சென்று கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிவித்து உள்ளார் 
 
ஆனால் அதே நேரத்தில் அதிமுகவை யாராலும் மிரட்ட முடியாது என்றும் அதிமுகவில் சில பிரச்சனைகள் வரும் ஆனால் அது சரியாகிவிடும் என்றும் அவர் கூறினார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments