Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக 25, பாஜக 15: கூட்டணி தொகுதி பகிர்வு குறித்து கசிந்த தகவல்

Webdunia
சனி, 16 பிப்ரவரி 2019 (11:40 IST)
வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக 25 தொகுதிகளிலும், பாஜக 15 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்திருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது.

பாஜக தனக்கு கிடைத்த 15 தொகுதிகளில் பாமக, தேமுதிகவுக்கு பிரித்து கொடுக்கும் என்றும், அதேபோல் அதிமுக தனக்கு கிடைத்த 25 தொகுதிகளில் வாசன் கட்சி, புதிய தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ரங்கசாமி கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியை ஒதுக்கும் என்றும் கூறப்படுகிறது. எனவே கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்தது போக அதிமுக 22 தொகுதிகளிலும் பாஜக 7 தொகுதிகளிலும் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த தொகுதி பகிர்வு குறித்த அறிவிப்பு பிரதமர் மோடி தமிழகம் வரும்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும், அதன்பின்னர் பிரச்சார பணி முழுவீச்சில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 12 தொகுதிகளை கேட்டு வருவதாகவும், ஆனால் திமுக 8 தொகுதிகளுக்கு மேல் தரமுடியாது என்று கறாராக கூறிவிட்டதாகவும் செய்திகள் கசிந்துள்ளது. இருப்பினும் இன்னும் ஓரிரு நாட்களில் தமிழகத்தில் இரு திராவிட கட்சிகளின் கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments