Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக+பாஜக+பாமக: மெகா கூட்டணியில் மற்றொரு கட்சி

Webdunia
புதன், 20 பிப்ரவரி 2019 (11:30 IST)
அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் இன்னும் இணையப் போகிறது என அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் கூறியுள்ளார்.
இனி திராவிடக் கட்சிகளோடு கூட்டணியே இல்லை என்று வீரவசனம் பேசி, மக்களை முட்டாளாக்கிய பாமக தற்பொழுது தனது கோட்பாடுகளை மீறி நாடாளுமன்றத் தேர்தலுக்காக 7 சீட்டுகளை பெற்றுக் கொண்டு அதிமுக மற்றும் பாஜக வோடுக் கூட்டணி அமைத்துள்ளது. பாஜகவிற்கு 5 இடம் கிடைத்துள்ளது. இதனால் கடுப்பான நெட்டிசன்கள் மற்றும் பாமகவை சேர்ந்த பலர் பாமக தலைமையை கண்டமேனிக்கு விமர்சனம் செய்து வருகின்றனர். இதற்கிடையே தேமுதிகவுடனான பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது. 
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன், கூட்டணி குறித்து தமிழ் மாநில காங்கிரஸுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும், சுமூகமான முடிவு எட்ட வாய்ப்பிருப்பதாகவும் கூறினார். மேலும்  பல கட்சிகள் இந்த மெகா கூட்டணியில் இணைய போகிறது எனவும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments