Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகையின் அந்தரங்க ஆபாச செல்போன் உரையாடல் : ஆதாரத்துடன் புகார் கொடுத்த பெண்

நடிகையின் அந்தரங்க ஆபாச செல்போன் உரையாடல்

Webdunia
செவ்வாய், 23 ஆகஸ்ட் 2016 (11:20 IST)
தனது கணவருடன் நடிகை ராதா பேசிய அந்தரங்க ஆபாச உரையாடலை, முனிவேல் என்பவரின் மனைவி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.


 

 
சில நாட்களுக்கு முன்பு, தனது கணவர் முனிவேலை, சுந்தரா டிராவல்ஸ் படத்தில் கதாநாயகியாக நடித்த,  நடிகை ராதாவிடமிருந்து மீட்டு தரும்படி, சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த உமாதேவி என்கிற பெண் போலீசாரிடம் ஒரு பரபரப்பு கொடுத்தார்.
 
அந்த புகாரில், தனது கணவனை காணவில்லை என்றும், அவரை ராதாதான் ஏதோ செய்திருப்பார் என்று தான் அஞ்சுவதாகவும், மேலும், தன்னை கொலை செய்து விடுவதாக ராதா மிரட்டுவதாகவும் அவர் கூறியிருந்தார். அதற்கு நடிகை ராதா எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.
 
இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு, சிறையில் இருக்கும்  வைரம் என்ற ரவுடி தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார் என்று கூறி, அந்த ஆடியோவை ராதா வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். தான் முனிவேலுடன் நட்போடு பழகுவதாகவும், இதை தவறாக எடுத்துக் கொண்டு தன்னை மிரட்டுகிறார்கள் என்றும் அவர் கூறியிருந்தார்.
 
இதுபற்றி நேற்று அவர் சென்னை கமிஷனர் அலுவலகம் வந்து தன்னை மிரட்டிய ரவுடி மற்றும் தன்மீது பொய் புகார் கொடுத்த உமாதேவி மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்தார். மேலும், அவர் கூறியபோது “ நான் தொழிலதிபர் ஒருவருடன் 7 வருடம் வாழ்ந்தேன். அவர் மீது ஏற்கனவே போலீசாரிடம் புகார் கொடுத்தேன். பின்னர், அவருடன் சமாதானமாகி புகாரை வாபஸ் பெற்றேன். அதன்பின் அவர் திருமணம் செய்ய முயன்றார்.

அதை தடுத்துவிட்டேன். எனவே என்னை பழிவாங்குவதற்காக, உமாதேவியை தூண்டிவிட்டு, ரவுடி மூலம் என்னை மிரட்டியுள்ளார்” என்று கூறினார்.
 
இந்நிலையில், தனது கணவர் முனிவேலுடன், ராதா பேசிய அந்தரங்க ஆடியோவை உமாதேவி வெளியிட்டுள்ளார். அந்த உரையாடலில், ராதாவும், முனிவேலும் படுக்கையறை பற்றி மிகவும் நெருக்கமாக பேசிக் கொள்வது பதிவாகியுள்ளது. அந்த உரையாடலை கேட்கும்போது, உமாதேவியும், முனிவேலும் நெருக்கமாக பழகியுள்ளார்கள் என்பது தெரிகிறது. மேலும், தன்மீது கொடுத்த புகாரை உமாதேவி வாபஸ் பெற வலியுறுத்த வேண்டும் என்று ராதா, முனிவேலுவிடம் பேசுவதும் பதிவாகியுள்ளது.
 
இப்படி உமாதேவியும், ராதாவும் மாறி மாறி செல்போன் பேச்சுக்களை வெளியிட்டு வருவது போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னிடம் அந்த கேள்வியை மட்டும் கேட்காதீர்கள்: செய்தியாளர்களிடம் சசிதரூர் கோரிக்கை..!

மதிமுகவுக்கு முடிவு காலமா? மல்லை சத்யாவுடன் கூண்டோடு வெளியேறும் நிர்வாகிகள்?

தாலிக்கு தங்கம்.. மணமகளுக்கு இலவச பட்டுச்சேலை.. ஈபிஎஸ் வாக்குறுதி..!

ஜீவனாம்சமாக வீடு, ரூ.12 கோடியும் BMW காரும் கேட்ட பெண்.. நீதிமன்றம் கொடுத்த பதிலடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments