Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரசியல் விளையாட்டை துவக்கிய கவர்ச்சிப்புயல் நடிகை நமீதா

அரசியல் விளையாட்டை துவக்கிய கவர்ச்சிப்புயல் நடிகை நமீதா

அரசியல் விளையாட்டை துவக்கிய கவர்ச்சிப்புயல் நடிகை நமீதா
, செவ்வாய், 24 மே 2016 (09:26 IST)
முதல்வர் ஜெயலலிதா  வெற்றிக்காக, திருப்பதி சென்று முதல் நபராக வேண்டுதலை நிறைவேற்றியதன் மூலம் மிகத்தேர்ந்த அரசியல்வாதியாக கவர்ச்சிப்புயல் நடிகை நமீதா மிளிருகிறார்.
 

 
கடந்த சிலதினங்களுக்கு முன்பு, கவர்ச்சிப்புயல் நடிகை நமீதா, முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில், அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். ஆனால், அவர் எதிர்பார்த்தபடி அவரை, தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக பயன்படுத்தவில்லை. இதற்காக, அவர் கொஞ்சமும் சோர்ந்து போகவில்லை. மாறாக, தனது முதல் அரசியல் பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியுள்ளார்.
 
ஆம், நடிகை நமீதா தனது பிறந்த நாளுக்கு திருப்பதி சென்று வழிபட்டவர், அதிமுக மீண்டும் வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வராக வரவேண்டும் என வேண்டியதாக நெத்தியடியாக கூறினார்.
 
தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதை அடுத்து, மீண்டும் திருப்பதி சென்ற நடிகை நமீதா, ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வரவேண்டும் என வேண்டினேன். எனது பிராத்தனை  நிறைவேற்றியதால், திருப்பதி கோவிலில் நேர்திக்கடன் செலுத்த வந்தேன் என மீண்டும் அதிரடிபுதிரடி கிளப்பினார். இதனால், தமிழ்திரையுலகமும், அரசியல் களமும் கொஞ்சம் ஆடிப்போனது என்னவோ உண்மையிலும் உண்மை.
 
நமீதா மேடம், நீங்க அரசியலில் முதல்கட்ட தேர்வில் முதல்கிளாஸில் பாஸ்... அப்புறம் என்ன தூள்கிளப்புங்க. தமிழ்நாடு இனி உங்க பக்கம்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கருணாநிதியை எரிச்சல்படுத்திய ராகுல் காந்தி