Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை மீரா மிதுனுக்கு ஜாமீன் மறுப்பு...

Webdunia
திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (18:59 IST)
நடிகை மீரா மிதுனுக்கு ஜாமீன் வழங்க சென்னை முதன்மை அமர்வு மறுத்துள்ளது.  

பட்டியலின மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மீரா மிதுனை சமீபத்தில் போலீசார் கைது செய்தனர். அவர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளதை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்

இந்நிலையில் நேற்று மீரா மிதுன் தனக்கு ஜாமீன் வேண்டுமென்று சமீபத்தில் சென்னை முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதில், தன்னை நம்பி அதிக தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள் என்றும் தான் வாய்தவறி தெரியாமல் பட்டியலினத்தவர் குறித்து பேசி விட்டதாகவும் கூறி மீரா மிதுன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.

மேலும், என்னைக் குறித்து அவதுறு செய்திகள் பரப்பியதால் எனக்கு உளைச்சல் ஏற்பட்டது. இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் விதமாக நான் பேசியபோது, வாய் தவறி பட்டியலின சமுதாயத்தைப் பற்றி பேசியதாக அதில் தெரிவித்தார்.

இந்த ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த நிலையில் இந்த மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு, ஏற்கனவே அவர் ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இந்த  ஜான்மீன் மனு மீண்டும் இன்று  விசாரணைக்கு வந்த நிலையில், வன்கொடுமை தடைச் சட்டம் வழக்கில் நடிகை மீரா மிதுனுக்கு ஜாமீன் வழங்க மறுப்புத் தெரிவித்துள்ளது. அத்துடன், நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக்கின் ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை நீதிமன்றாம் தள்ளுபடி செய்துள்ளது.;  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

நீட் தேர்வு நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்! சென்னை மாணவி தற்கொலை குறித்து ஈபிஎஸ்..!

திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன்.. பதில் கூற மறுத்த எடப்பாடி பழனிசாமி..!

அடுத்த கட்டுரையில்
Show comments