Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காரி துப்பிய கஸ்தூரி: தூண்டிவிட்ட திமுகவையா? அய்யாகண்ணுவையா???

Webdunia
செவ்வாய், 16 ஏப்ரல் 2019 (11:52 IST)
நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் அய்யாக்கண்ணுவின் புகைப்படத்தையும் அவர் கூறிய செய்தி ஒன்றையும் பதிவிட்டு காரி துப்பியுள்ளார். இந்த டிவிட்டுக்கு பலர் கமெண்ட் செய்து வருகின்றனர். 
 
பிரதமர் மோடியை எதிர்த்து அவர் போட்டியிடும் வாரணாசி தொகுதியில் போட்டியிட போவதாகவும், அதுமட்டுமின்றி தன்னுடன் 111 விவசாயிகளும் அதே தொகுதியில் போட்டியிட போவதாகவும் விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு தெரிவித்தார். 
 
ஆனால், டெல்லியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை சந்தித்துவிட்டு மோடியை எதிர்த்து போட்டியிடும் முடிவை திரும்பப்பெறுவதாகவும், விவசாயிகளின் கோரிக்கைகளை பாஜக அரசு நிறைவேற்றுவதாக உறுதி அளித்து இருப்பதாகவும் கூறி பல்டி அடித்தார். மேலும், மோடிக்கு எதிராக விவசாயிகளை  டெல்லி வரை சென்று போராடத் தூண்டியதும், எங்களை முழுமையாக இயக்கியதும்  காங்கிரஸ் மற்றும் திமுகதான் என தெரிவித்தார். 
இதனால் அய்யாக்கண்ணு மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் தற்போது நடிகை கஸ்தூரி அய்யாக்கண்ணுவின் புகைப்படத்தை பதிவிட்டு, கர்ர்ர்ர்ர்...தூ! எனவும் பதிவிட்டுள்ளார். இந்த பதிவினை கண்ட பலர் இது குறித்து கமெண்ட் செய்து வருகின்றனர். 
 
பலர் அய்யாக்கண்ணுக்கு எதிராக பதிவிட்டுள்ளனர், இப்படி சொல்ல சொன்னது பிஜேபி தான்னு தேர்தல் முடிந்த பிறகு சொல்லுவார் என ஒருவர் கமெண்ட் செய்ததற்கு சொன்னாலும் சொல்லுவார், ஆச்சர்ய படுவதற்கில்லை என கஸ்தூரி பதில் அளித்துள்ளார். 
 
அதே போல் மற்றொருவர், இந்த தூ யாருக்கு மேடம். தூண்டிவிட்ட திமுகவுக்கா? இல்ல அய்யாகண்ணுக்கா??? என கேட்க ஆமாம் ஆமாம் என பதிவிட்டுள்ளார். இந்த இரண்டு ஆமாமிற்கு பின்னணியில் என்ன இருக்கிறது என்பதை கஸ்தூரிதான் சொல்ல வேண்டும்...

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

கூட்டணியில் மட்டுமே பங்கு.. ஆட்சியில் எப்போதும் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ. பெரியசாமி

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments