Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பானுப்ரியா விவகாரத்தில் திடீர் திருப்பம்: சிறுமியின் தாயார் அதிரடி கைது!

Webdunia
சனி, 2 பிப்ரவரி 2019 (06:39 IST)
நடிகை பானுப்ரியா, ஆந்திராவை சேர்ந்த சிறுமி ஒருவரை வேலைக்கு வைத்து கொடுமைப்படுத்துவதாகவும், சிறுமிக்கு சம்பளமும் கொடுக்காமல் உறவினர்களை பார்க்க அனுமதிக்காமல் சித்ரவதை செய்ததாகவும் அந்த சிறுமியின் தாயார் போலீஸ் புகார் கொடுத்தார். இதுகுறித்து ஆந்திர போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தன்னுடைய வீட்டில் பணிபுரிந்த சிறுமி, வீட்டில் உள்ள பொருட்களை திருடியதாக பானுப்ரியா தரப்பில் கொடுத்தபுகாரும் விசாரணை செய்யப்பட்டது. இதுகுறித்து அந்த சிறுமியிடம் விசாரணை செய்தபோது, பானுப்ரியாவின் வீட்டில் உள்ள தங்க நகை, பணம் உள்ளிட்ட பொருட்களை திருடி, அவர் தாயாரிடம் கொடுத்தனுப்பியதாக சிறுமி கூறியதாக தெரிகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக சிறுமி சந்தியாவை போலீசார் மீட்டு சென்னையில் உள்ள சிறார் இல்லத்தில் அனுமதித்திருந்தனர். சிறுமியின் தாயார் மீதும், பானுப்ரியா தரப்பு போலீசில் புகார் தெரிவித்திருந்த நிலையில், சென்னை வந்த சிறுமியின் தாயாரை போலீசார் கைது செய்து  அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெருகி வரும் தெருநாய்கள் தொல்லை: உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு? தமிழகத்தில் கனமழை பெய்யுமா?

சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால் தகர்ப்போம்: அமெரிக்காவில் பாகிஸ்தான் ராணுவ தளபதி சர்ச்சை பேச்சு

டெல்லியில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணி தடுத்து நிறுத்தம்: ராகுல், பிரியங்கா உள்பட 200க்கும் மேற்பட்ட எம்பிக்கள் கைது..!

10 மணிக்கு முதல் சம்பளம்.. 10.05க்கு ராஜினாமா.. HR ஒருவரின் வேதனை பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments