Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா செல்வமணி சென்னை மருத்துவமனையில் அனுமதி..!

Webdunia
சனி, 10 ஜூன் 2023 (09:15 IST)
ஆந்திர மாநில அமைச்சரும் பிரபல நடிகையுமான ரோஜா செல்வமணி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை ரோஜா என்பதும் அதன் பின்னர் அவர் ஆந்திர மாநில அரசியலில் கடந்த பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார் என்பதும் தெரிந்ததே. 
 
ஆந்திர மாநில முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவி ஏற்றது ரோஜாவுக்கு சில முக்கியத்துவமான பதவி அளிக்கப்பட்டது என்பதும் தற்போது அவர் ஆந்திர மாநில இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஆக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ரோஜா செல்வமணி கால் வீக்கம் காரணமாக சென்னை கிரீன் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்
 
அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர் விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரியாணி, சிக்கன் தாங்க.. குழந்தையின் கோரிக்கையை பரிசீலனை செய்யும் கேரள அரசு..!

திடீரென பின்வாங்கிய டிரம்ப்.. மெக்சிகோ மீதான வரி விதிப்பு நிறுத்தி வைப்பதாக அறிவிப்பு..!

டிரம்பை சந்திக்க அமெரிக்கா செல்கிறாரா பிரதமர் மோடி? முக்கிய பேச்சுவார்த்தை..!

ஆதி திராவிடர், பழங்குடியினர் மாணவர்களின் கல்விக்கடன்கள் ரத்து..! தமிழக அரசு அறிவிப்பு..!

சேலம் பெரியார் பல்கலையில் புதிய கல்வி கொள்கை அமல்? கொளத்தூர் மணி குற்றச்சாட்டுக்கு பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments