Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறித்தி திரைத்துறையினர் அறவழிப் போராட்டம்

Webdunia
ஞாயிறு, 8 ஏப்ரல் 2018 (08:55 IST)
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், நடிகர் சங்கம் சார்பில் அறவழிப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
உச்ச நீதிமன்றம், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என அறிவுறித்தியிருந்ததை, மத்திய அரசு மதிக்காமல் தமிழக மக்களை ஏமாற்றியிருக்கிறது. மேலும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க 3 மாத காலக் கெடு வேண்டும் என  கால அவகாசம் கேட்டிருக்கிறது மத்திய அரசு.
 
அதேபோல் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மாணவ மாணவியர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
செய்தியாளர்களிடம் பேசிய தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பொன்வண்ணன் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் தென்னிந்திய நடிகர் சங்கம் வரும் ஏப்ரல் 8-ந் தேதி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது என்றார்.
 
அதன்படி இன்று சென்னை வள்ளுவர்கோட்டத்தில், நடிகர் சங்கம் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் அறவழிப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த அறவழிப் போராட்டத்திற்கு ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி நடிகர் விஜய் தற்பொழுது இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments