Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீன பொருட்களை வாங்க வேண்டாம் : நடிகர் விவேக் கோரிக்கை

சீன பொருட்களை வாங்க வேண்டாம் : நடிகர் விவேக் கோரிக்கை

Webdunia
வியாழன், 6 அக்டோபர் 2016 (14:25 IST)
சீனாவில் தயாரிக்கப்பட்டு, இந்தியாவிற்கு விற்பனைக்கு வரும் பொருட்களை வாங்க வேண்டாம் என நடிகர் விவேக் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
பாகிஸ்தான் தீவிரவாதிகள் மற்றும் ராணுவ வீரர்கள் அடிக்கடி இந்திய எல்லயை மீறி உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் கூட தீவிரவாதிகள் தாக்கியதில் இந்திய ராணுவ வீரர்கள் 19 பேர் பலியாகினர். 
 
எனவே, பாகிஸ்தானுக்கு பதில் அடிகொடுக்கும் விதமாக, சில நாட்களுக்கு முன்பு இந்திய நடத்திய சர்ஜிக்கல் டிரைக் ஆபரேஷனில் பாகிஸ்தானின் 7 முகாம்கள் அழிக்கப்பட்டன. மேலும் 2 பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் 55 தீவிரவாதிகள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ஆனால், பாகிஸ்தான் நாட்டிற்கு தொடர்ந்து சீனா ஆதரவு தெரிவித்து வருகிறது. மேலும், பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பிரம்மபுத்திராவின் கிளை நதியை இந்தியாவிற்கு வரவிடாமல் தடுத்துள்ளது.
 
இந்நிலையில் நடிகர் விவேக் தனது டிவிட்டர் பக்கத்தில், சீன பொருட்களை தவிர்ப்போம் என்று கூறியுள்ளார்.


 

 
மேலும், நவராத்திரி மற்றும் தீபாவளி சமயத்தில், விற்பனைக்கு வரும் சீன பட்டாசுகளை வாங்க வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெருநாய்களை கருணைக் கொலை செய்ய அனுமதி! - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

காங்கிரஸை காலி பண்ணி விட்டதே தேர்தல் ஆணையம்தான்! - ராகுல்காந்தி குற்றச்சாட்டு!

புற்றுநோய், தைராய்டு.. தீராத நோய்கள்! ஒரு குடும்பமே தற்கொலை! - ஈரோட்டில் அதிர்ச்சி சம்பவம்!

பிரதமர் மோடியை சந்தித்தபோது மனு அளித்த எடப்பாடியார்? - மனுவில் இருந்தது என்ன?

மேற்குவங்கத்தில் 1.25 கோடி வாக்காளர்கள் சட்டவிரோதமாக வந்த குடியேறிகள்: பாஜக அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments