Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமாக்காரங்க ஏன் அரசியலுக்கு வரக்கூடாது? மக்கள் முடிவுக்காக காத்திருக்கிறேன்! - அரசியல் எண்ட்ரி குறித்து விஷால்!

Prasanth Karthick
திங்கள், 22 ஜூலை 2024 (08:48 IST)

தனது அரசியல் வருகை குறித்து பேசிய நடிகர் விஷால், மக்களின் முடிவுக்காக காத்திருப்பதாக பதில் அளித்துள்ளார்.

 

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக உள்ளவர் விஷால். நடிப்பதில் மட்டுமல்லாமல் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்டவற்றிலும் தலைமை பொறுப்புகள் வகித்து பல்வேறு செயல்பாடுகளை செய்துள்ளார். தொடர்ந்து சினிமாத்துறையில் உள்ள பிரச்சினைகள் குறித்து நடிகர் விஷால் பேசி வருகிறார்.

ஆனால் சமீபகாலமாக நடிகர் விஷாலும் அரசியலில் நுழைவது குறித்து தீவிரமாக காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. நடிகர் விஜயகாந்தை பின்பற்றி தன்னை தேடி வருபவர்களுக்கு சாப்பாடு போட்டு அனுப்புவது போன்றவற்றை செய்து வருகிறார். சமீபத்தில் ஒரு கிராமத்திற்கு ஷூட்டிங் சென்றவர் அங்கு மக்களுக்கு தண்ணீர் வசதி இல்லாததை கண்டு அவர்களுக்கு குடிநீர் வசதிகளை தனது செலவில் செய்து கொடுத்தார். இதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் விஷால் போட்டியிடுவாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.
 

ALSO READ: இன்று ஜாமீன் மனு விசாரணை.. நேற்று ஐசியூவில் அனுமதி.. செந்தில் பாலாஜியால் பரபரப்பு..!

இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த விஷால் “சட்டமன்ற தேர்தல் வருகிறது. நேரடியாக அரசியலில் இறங்குவேனா என்று கேட்டால், நான் வர வேண்டுமா இல்லையா என்பதை மக்கள்தான் சொல்ல வேண்டும். இறங்க வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டால் வேறு வழியே இல்லை.

நான் ஷூட்டிங் சென்ற ஒரு கிராமத்தில் 70 ஆண்டுகளாக குடிநீர் வசதி இல்லாமல் இருப்பதை பார்த்தபோது அசிங்கமாக உள்ளது. அதுபோன்ற நிலைமை இல்லாமல் இருந்தால் நல்லது. அரசியல்வாதிகள் நடிகர்களாகும்போது, நடிகர்கள் ஏன் அரசியல்வாதி ஆகக்கூடாது?” என்று பேசியுள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரண்டாவது நாளாக ஏற்றம் காணும் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ் நிலவரம்..!

ஏற்ற இறக்கமின்றி ஒரே விலையில் இருக்கும் தங்கம்.. வெள்ளி விலையில் சிறிய மாற்றம்..!

தமிழ் தாழ்ந்த மொழி என்பதுதான் RSS சித்தாந்தம்! - ராகுல்காந்தி தாக்கு!

சிறுமியை கடத்திய வழக்கில் கைதான நபர்: ஜாமீனில் வந்து அதே சிறுமியை பாலியல் பலாத்காரம்..!

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டாலும் வேலை நிறுத்தம் தொடரும்: மேற்குவங்க மாநில டாக்டர்கள் உறுதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments