Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகர் விஷாலுக்கு எதிராக பாடை கட்டி போராட்டம்

நடிகர் விஷாலுக்கு எதிராக பாடை கட்டி போராட்டம்

நடிகர் விஷாலுக்கு எதிராக பாடை கட்டி போராட்டம்
, சனி, 11 ஜூன் 2016 (09:07 IST)
ஜல்லிக்கட்டுக்கு எதிராக நடிகர் விஷால் கருத்து தெரிவித்தார் என்று கூறி, அவரை கண்டித்து மதுரையில் பாடை கட்டி போராட்டம் நடைபெற்றது.
 

 
தமிழர்களின் வீரவிளையாட்டு ஜல்லிக்கட்டு. இந்த ஜல்லிக்கட்டுக்கு எதிராக நடிகர் விஷால் கருத்துக் கூறியதாக கூறி தமிழகம் முழுக்க போராட்டம் வெடித்து வருகிறது.
 
இந்த நிலையில், நடிகர் விஷாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரையில் ஜல்லிக்கட்டு மாடுபிடிவீரர்கள், மாடுவளர்போர் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் ஒன்றினைந்து நடிகர் விஷாலுக்கு எதிராக பாடை கட்டி போராட்டம் நடத்தினர்.
 
மேலும், நடிகர் விஷால் ஜல்லிக்கட்டுக்கு எதிராக சொன்ன கருத்தை வாபஸ் பெற வேண்டும் என்று கோரிக்கை  விடுத்தனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சமஸ்கிருதத்தைத் திணிக்க மீண்டும் முயற்சியா? : கருணாநிதி கேள்வி