Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் விஜய் தந்தைக்கு பாஜகவினர் அனுப்பிய பார்சல் .. கொதித்த ரசிகர்கள்

Webdunia
திங்கள், 27 மே 2019 (14:42 IST)
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய்.  சில வருடங்களுக்கு முன்னர் விஜய்யின் மக்கள் இயக்கத்தை தமிழ்நாட்டில் பிரபலமாக்க முயற்சி செய்தார் அவரது அப்பா எஸ். ஏ. சந்திரசேகர். ஆனால் அவரது ரசிகர்கள் மட்டும் இதில் ஐக்கியமானார்கள். 
அதன் பிறகு விஜய்  , ஏ.எல் விஜய் இயக்கத்தில் தலைவா என்ற படத்தில் நடித்தார். இதில் அரசியல் வசனங்கள் இருப்பதாகக் கூறி அன்றைய முதல்வர் ஜெயலலிதாவால் இப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.
 
அதன்பிறகு விஜய் மக்கள் இயக்கத்தில் அவர்களுடைய ரசிகர்கள் தீவிரமாக தேர்தல் பணியாற்றினார்கள்.

அதனையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் போது எல்லாம் எஸ்.ஏ. சந்திரசேகர் தனது மகன் விஜய்யின் அரசியல் வருகையை உறுதி செய்தார். ஆனால் விஜய் இதற்கு மௌனமே சாதித்தார்.
 
இந்நிலையில் தற்போது நடிகர்  விஜய்யின் அப்பாவும். இயக்குநருமான எஸ்.ஏ . சந்திரசேகருக்கு பாஜகவினர் காவி வேட்டியை பார்சல்  அனுப்பிவைத்துள்ளனர்.
 
கடந்த 20 ஆம்தேதி வடபழனியில், காப்பாத்துங்க நாளைய சினிமாவை என்ற குறும்பட வெளியீட்டு விழாவில் பல பிரபலங்கள் கலந்துகொண்டு பேசினர். அதில் எஸ். ஏ. சந்திரசேகரும் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் :
 
90 % பேர் அரசியலில் திருடர்களாக உள்ளனர். அரசியல்வாதிகள் சினிமாவை அழிக்க திட்டம் போட்டுள்ளனர். ஆட்சிக்கு யார் வந்தாலும் சினிமாவை காப்பாற்றப்போவதில்லை என்று தெரிவித்தார்.
 
மேலும், தமிழ் ராக்கர்ஸ் இணையதளங்களுடன் அரசியல்வாதிகளும் கூட்டு சேர்ந்து செயல்படுகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. மக்களைத் திரட்டி போராடினால்தான்  அரசுக்கு சொரணை வரும். தமிழகத்தை பொறுத்தவரை மக்கள அனைவரும் காவி வேட்டி கட்டி அலையப்போவதாகவும் இயக்குநர் எஸ்.எ.சந்திரசேகர் தெரிவித்தார். 
 
இதனையடுத்து அவருக்கு தன் மகனை முதல்வராக்க ஆசை அதனால் மக்களின் கனவத்தை ஈர்க்க பரபரப்பாகப் பேசி வருவதாகவும் செய்திகள் வெளியான நிலையில் மக்களவைத் தேர்தலில் பாஜகவினர் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தனர்.
இந்நிலையில் எஸ், ஏ. சந்திரசேகர் முகவரிக்கு பாஜகவினர் ஒரு பார்சலை அனுப்பி உள்ளனர். அதில் காவி வேட்டி, இருந்ததாகவும் தெரிகிறது. இது திருப்பூர் தெற்கு பாஜக இளைஞர் அணி சார்பில் அவருக்கு  அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

தேர்தல் பரபரப்பு மற்றும் ஐபிஎல்.. தெலுங்கானாவில் மூடப்படும் திரையரங்குகள்..!

இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்.. முதல் முறையாக குடியுரிமை பெற்ற 14 பேர்..!

இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை பெய்யும்: எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments