Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று விசாரணைக்கு வருகிறதா விஜய் மேல் முறையிட்டு மனு ??

Webdunia
திங்கள், 19 ஜூலை 2021 (09:41 IST)
நடிகர் விஜய் தாக்கல் செய்த மேல் முறையிட்டு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
வரி கட்டும் விவகாரம் தொடர்பாக விஜய் தரப்பு மேல் முறையீடு செய்தது. இது குறித்து விஜய்யின் வழக்கரிஞர் வரி கட்ட கூடாது என்ற நோக்கம் இந்த வழக்கில் துளியும் இல்லை. வரிவிதிப்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பும் அரசின் அணுகுமுறையும் முரண்பட்ட இருந்ததால் இந்த வழக்கு தொடரப்பட்டது. அப்போதே நுழைவு வரி கட்டித்தான் ஆகவேண்டும் என்று உத்தரவு இருந்திருந்தால் எந்த ஆட்சேபனையும் இன்றி விஜய் அவர்கள் வரி கட்டி இருப்பார். 
 
சமூகத்தில் தனக்குரிய செல்வாக்கை பயன்படுத்தி வரி விதிப்பில் இருந்து யாரும் விலகி ஓட வெளியேற முடியாது, அது விஜய் அவர்களுக்கு நன்றாக தெரியும். ஆனால் இப்போது நீதிபதி ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்து அபராதம் விதித்துள்ளார். தீர்ப்பில் எங்களுக்கு இருக்கும் ஆட்சேபனைக்குரிய பகுதிகளை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருக்கிறோம் என தெரிவித்தார். 
 
இந்நிலையில் சொகுசு கார் வழக்கில் விதிக்கப்பட்ட அபராதம் மற்றும் விமர்சனங்களை நீக்கக்கோரி நடிகர் விஜய் தாக்கல் செய்த மேல் முறையிட்டு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அமெரிக்காவின் ஹவாய் தீவை தாக்கியது சுனாமி.. அலறியடித்து ஓடிய மக்கள்.. 3 மணி நேரம் சோதனையான நேரம்..!

நிலநடுக்கம், சுனாமியை ஏற்படுத்தியது ரஷ்யாவா? அமெரிக்கா டார்கெட்டா? - பகீர் கிளப்பும் சதிக்கோட்பாடுகள்!

ஜெயலலிதாவின் முடிவு வரலாற்று பிழை! சர்ச்சை பேச்சு குறித்து கடம்பூர் ராஜூ விளக்கம்!

இன்றும் நாளையும் 4 டிகிரி வெப்பம் அதிகரிக்கும்.. ஆகஸ்ட் 2 முதல் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments