Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் வையாபுரி பிரச்சாரத்தில் குதித்தார்

Webdunia
திங்கள், 9 மே 2016 (17:20 IST)
அதிமுக சார்பில் போட்டியிடும் கவுடம்பாளையம் தொகுதி வேட்பாளரை ஆதரித்து நடிகர் வையாபுரி தேர்தலில் பிரச்சாரம் செய்யத் தொடங்கினார்.


 

ஏராளமான நடிகர், நடிகைகள் தொடர்சியாக அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இதைத்தொடர்ந்து தற்போது நடிகர் வையாபுரி பிரச்சாரம் செய்ய புதிதாக களம் இறங்கியுள்ளார். 
 
நடிகர் வையாபுரி கவுடம்பாளையம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வி.சி.ஆறுக்குட்டியை ஆதரித்து பூச்சியூர், அப்புலுபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் பிரச்சாரம் செய்தார்.
 
பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது:-
 
ஏழை எளிய மக்கள், குழந்தைகள், மாணவர்கள், திருமண பெண்கள் என அனைவருக்கும் பல்வேறு நலத் திட்டங்களை அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா நிறைவேற்றியுள்ளார்.
 
கற்பனையில் எண்ண முடியாத நலத் திட்டங்களை செயல்படுத்துவதாக தற்போது இந்த முறை தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
 
எனவே அனைத்து திட்டங்களையும் பயன்பெற அதிமுக-விற்கு வாக்களிக்க வேண்டும், என்றார்.
 
மேலும் அதிமுக கட்சி அனைத்து தொகுதியிலும் பிரபல நட்சத்திரங்களைக் கொண்டு தீவிரமாக வாக்கு சேகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வசதி படைத்த குடும்ப பெண்களை காதல் வலையில் வீழ்த்தி மோசடி! - தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்து சிக்கிய கோவை வாலிபர்

வேலைக்கு ஆள் எடுக்கும் HRஐயே பணிநீக்கம் செய்த IBM.. இனி எல்லாமே AI தான்..!

பொறுமை கடலினும் பெரிது: ராஜ்ய சபா எம்பி சீட் குறித்து பிரேமலதா கருத்து..!

500 ரூபாய் நோட்டை திரும்ப பெற வேண்டும்: அப்ப தான் கறுப்பு பணம் அழியும்: சந்திரபாபு நாயுடு..!

வகுப்புக்கு செல்லவில்லை என்றால் விசா ரத்து: இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்