Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் சூர்யா விவகாரம் : சம்பந்தப்பட்ட பெண்மணி விளக்கம்

Webdunia
புதன், 1 ஜூன் 2016 (12:29 IST)
நடிகர் சூர்யா இளைஞரை தாக்கியதாக கூறப்பட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட பெண்மணி டிவிட்டரில் சூர்யாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.


 

 
சென்னை அடையாறு திருவிக மேம்பாலத்தில் ஒரு பெண்மணி ஓட்டிய கார் மீது, மோட்டர் சைக்கிளில் வந்த இளைஞர் மோதியதால், அந்த வாலிபருக்கும், அந்த பெண்மனிக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டதாகவும், அப்போது அங்கு வந்த நடிகர் சூர்யா, அந்த இளைஞனை அடித்ததாகவும் கூறப்பட்டது. 
 
அந்த வாலிபர் சூர்யா மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். அதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அந்த வாலிபரை அடிக்கவில்லை என்று சூர்யா தரப்பில் கூறப்பட்டது. அந்த வாலிபரும் சூர்யா மீது கொடுத்த புகாரை திரும்ப பெற்றுள்ளார்.
 
இந்நிலையில், சம்பந்தப்பட்ட அந்த பெண்மனி புஷ்பா கிருஷ்ணசுவாமி தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகர் சூர்யாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
 
“அந்த இரு இளைஞர்களும் என்னை பயமுறுத்தி மிரட்டிய போது, அவர்கள் கைகள் என் மீது படாமல் நடிகர் சூர்யா பார்த்துக் கொண்டார். அந்த வாலிபர்கள் என்னை மிரட்டினார்கள். என் கார் கண்ணாடியை உடைக்க முயன்றார்கள். மேலும், பாதுகாப்பு கருதி என்னுடைய காருக்குள் அமர  என்னை அவர்கள் விடவில்லை.  என்னிடம் அவர்கள் பணம் கேட்டு மிரட்டினர். 


 

 
நான் அந்த கூட்டத்தில் தனியாக நின்று கொண்டிருந்தேன். அவர்கள் யாருக்கோ போன் செய்து நடவடிக்கை எடுக்கப் போவதாக என்னை மிரட்டினார்கள். 


 

 
தன்னுடைய காரை நிறுத்தி இறங்கி வந்த சூர்யா, பெண்களை தொடக்கூடாது என்று அவர்களை எச்சரித்தார். தக்க சமயத்தில் அவர் எனக்கு உதவி செய்தார்” என்று கூறியுள்ளார்.

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments