Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் போரட்டத்துக்கு அழைக்கும் சிம்பு: தெருவில் அமர்ந்து போராடுங்கள்! (வீடியோ இணைப்பு)

மீண்டும் போரட்டத்துக்கு அழைக்கும் சிம்பு: தெருவில் அமர்ந்து போராடுங்கள்! (வீடியோ இணைப்பு)

Webdunia
புதன், 18 ஜனவரி 2017 (12:32 IST)
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் நீடிக்க பிரபலங்களின் ஆதரவும் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே ஜல்லிக்கட்டுக்காக மவுன போராட்டம் நடத்திய நடிகர் சிம்பு தற்போது மீண்டும் தெருவுக்கு வந்து போராட அழைப்பு விடுத்துள்ளார்.


 
 
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் உச்சத்தை அடைந்துள்ளது. அலங்காநல்லூரில் போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்ததை அடுத்து போராட்டம் வெடித்து பற்றி எரிகிறது. இந்நிலையில் நடிகர் சிம்பு சமூக வலைதளத்தில் ஜல்லிக்கட்டுக்கு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளார்.

 

 
 
முன்னதாக நடிகர் சிம்பு வீட்டு வாசல் முன் அமைதியாக நின்று போராட வாருங்கள் என அழைப்பு விடுத்து அது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இந்நிலையில் தற்போது அனைவரும் தெருவில் இறங்கி போராட வேண்டும் என அழைத்துள்ளார். மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள சாலைகளில் அமர்ந்து போராட்டம் நடத்துங்கள் என கூறினார்.
 
மேலும் ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடை நீங்கி ஜல்லிக்கட்டு நடக்கும் வரை போராட்டம் தொடர வேண்டும். நாம் யாரும் போராட்டத்தில் இருந்து பின் வாங்க கூடாது நாம் யாரென்று காட்டுவோம் என சிம்பு கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன்: ஷங்கர்

3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க டெண்டர்.. மின்சார வாரியம் அறிவிப்பு..!

1 மில்லியனை கடந்த அண்ணாமலையின் ஹேஷ்டேக்! திமுக செல்வாக்கு குறைகிறதா?

உள்ளத்தில் தமிழ் உலகிற்கு ஆங்கிலம்.. இரு மொழி கொள்கையால் வெல்வோம்.. ஈபிஎஸ்

மத்திய அரசை கண்டித்து மீண்டும் போராட்டம்.. திமுக அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments