Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீட்பு பணிகளில் தமிழக அரசு அருமையாக செயல்படுகிறது: நடிகர் சித்தார்த் பெருமிதம்

மீட்பு பணிகளில் தமிழக அரசு அருமையாக செயல்படுகிறது: நடிகர் சித்தார்த் பெருமிதம்
, செவ்வாய், 8 டிசம்பர் 2015 (16:36 IST)
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசு நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் விதத்தில் எந்தவொரு குறையும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை என்றும்  அருமையாக செயல்பட்டு 5 நாட்களில் அனைத்தையும் சரி செய்ய வேறு எந்த அரசாலும் தமிழகத்தில் முடியாது என்றும் சித்தார்த் குறிப்பிட்டுள்ளார்.


 

 
சென்னையில் பாதிக்கப்பட்டோருக்கு நடிகர் சித்தார்த், ஆர்ஜே. பாலாஜி ஆகியோர் தன்னார்வலர்களுடன் சேர்ந்து மீட்பு நடவடிக்கைகளிலும், பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை தந்தும் கனமழையால் பாதித்த நாள் முதல் உதவி வருகிறார்கள்.
 
இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் பகுதிகக்கு சென்ற நடிகர் சித்தார்த், அங்கு செய்தியாளர்களை சந்தித்தார், அப்பொழுது கூறுகையில், கடலூரில் உள்ள 15 கிராமங்களுக்கு நாங்கள் சென்று நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறோம், அந்த கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்குவதாகச் சொல்லப்பட்டது. ஆனால் அந்த செய்தி முற்றிலும் உண்மையல்ல, வெளியில் இருந்துகொண்டு கடலூரைப் பற்றி தயவு செய்து யாரும் கருத்து சொல்லவேண்டாம் என்று அவர் குறிப்பிட்டார்
 
சென்னையில் பெய்த கனமழையால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் மாநில, மத்திய அரசும் முழுவீச்சில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் நடிகர்களும் நிவாரணப் பணிகளில் தங்களை முழுவீச்சில் ஈடுபடுத்தி வருகின்றனர்.
 
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மக்களுக்கு தேவைப்படும் உணவுப் பொருட்கள் தேவைப்படுபவர்களுக்கு கிடைக்காமல் போவதாகவும். அந்த உணவுப் பொருள்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் திருடப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
இயற்கை பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களை விட அவர்களுக்கு உதவுவோர் முதல் முறையாக அதிக அளவில் இருக்கிறார்கள் என்றும் அதற்கு சமூக வலைத்தளங்களை காரணம் காட்டிய அவர், அதனால் நன்மையும் உண்டு தீமையும் உண்டு என்றார்.

webdunia

 

 
பல நாட்களுக்கு முன் யாரோ ஒருவர் 5 ஆயிரம் தண்ணீர் பாட்டில்கள் வேண்டும் என்று விடுத்த வேண்டுகோள் 6 நாட்கள் கழித்தும் சமூக வலைத்தளங்களில் அப்படியே இருக்கும் என்பது ஒரு பாதகம் தான் என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
தமிழக அரசு நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் விதத்தில் எந்த குறையும் இருப்பதாக தமக்குத் தெரியவில்லை  என்றும் அருமையாக செயல்பட்டு ஐந்தே நாட்களில் அனைத்தையும் சரி செய்ய வேறு எந்த அரசாலும் முடியாது என்றும் அவர் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil