Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 வழிச்சாலை தேவை தான்... ஆனால்? என்ன சொல்கிறார் ரஜினிகாந்த்

Webdunia
ஞாயிறு, 15 ஜூலை 2018 (11:35 IST)
சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை தேவையான ஒரு திட்டம் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை - சேலம் இடையே மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமை சாலைத் திட்டத்தை அமைக்க முடிவு செய்துள்ளது. காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய 6 மாவட்டங்களில் அமைய உள்ள இந்த திட்டத்தால் ஏராளமான விளை நிலங்கள் பாதிக்கப்படும் என தெரிகிறது. 
 
இயற்கை வளங்களை அழித்து அமைக்க போகும் இந்த சாலைக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும் தமிழக அரசோ சாலை அமைத்தே தீருவோம் என்று விடாப்பிடியாக செயல்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்திடம் எட்டு வழிச்சாலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து பேசிய அவர் இந்த திட்டம் செயல்படுத்த வேண்டிய ஒரு நல்ல திட்டம். வளர்ச்சிகளை கொண்டு வந்தால் தான் நாடு முன்னேற முடியும்.
 
ஆனால் அதே வேளையில் இதனால் பாதிக்கப்படும் மக்களை திருப்திபடுத்தும் வகையில் அவர்களுக்கு பணமோ இடமோ கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. முடிந்த அளவுக்கு விவசாயிகளையும், விவசாய நிலங்களையும் பாதிக்காமல் திட்டம் நிறைவேற்றப்பட்டால் நல்லது என ரஜினிகாந்த தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வசதி படைத்த குடும்ப பெண்களை காதல் வலையில் வீழ்த்தி மோசடி! - தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்து சிக்கிய கோவை வாலிபர்

வேலைக்கு ஆள் எடுக்கும் HRஐயே பணிநீக்கம் செய்த IBM.. இனி எல்லாமே AI தான்..!

பொறுமை கடலினும் பெரிது: ராஜ்ய சபா எம்பி சீட் குறித்து பிரேமலதா கருத்து..!

500 ரூபாய் நோட்டை திரும்ப பெற வேண்டும்: அப்ப தான் கறுப்பு பணம் அழியும்: சந்திரபாபு நாயுடு..!

வகுப்புக்கு செல்லவில்லை என்றால் விசா ரத்து: இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments