Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி கட்சியெல்லாம் துவங்க மாட்டார் - போட்டுத் தாக்கும் சுதீஷ்

Webdunia
திங்கள், 23 ஜூலை 2018 (15:43 IST)
நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் நிலைப்பாடு குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ் கருத்து தெரிவித்துள்ளார்.

 
ஆன்மீக அரசியலை முன்னெடுப்பதாக கூறிய ரஜினிகாந்த், இதுவரை கட்சி தொடங்கவில்லை. அவர் எந்த தேர்தலில் போட்டியிட முடிவெடுத்துள்ளார் என்பது தெரியவில்லை.
 
ஏனெனில், 2.0 படத்தை முடித்த பின் அவர் அரசியல் கட்சி துவங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் காலா பட அறிவிப்பை வெளியிட்டார். காலாவிற்கு பிறகாவது ஏதேனும் நடக்கும் என எதிபார்த்திருந்த நேரத்தில் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் நடிக்க சென்றுவிட்டார். இந்த படத்திற்கு பின்பு கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் அவர் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. எனவே, அவர் கட்சி துவங்குவாரா? மாட்டாரா? என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், திருப்பூரில் நடைபெற்ற தேமுதிக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மைத்துனரும், அக்கட்சியின் துணை செயலாளருமான சுதீஷ் செய்தியாளர்களிடம் பேசிய போது “தமிழக அரசு பாஜக கட்டுப்பாட்டில் இருக்கிறது. எனவேதான், தமிழகத்தில் எந்த நலத்திட்டங்களும் செயல்படாமல் இருக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் எப்போதும் கட்சி துவங்க மாட்டார்” என அவர் பேட்டியளித்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments