Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிகாந்தின் அண்ணன் மனைவி காலமானார் - ரஜினி பெங்களூருவிற்கு விரைந்தார்

Webdunia
திங்கள், 3 செப்டம்பர் 2018 (14:41 IST)
நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் மனைவி மாரடைப்பால் உயிரிழந்ததால், அவரின் இறுதி அஞ்சலியில் கலந்துகொள்ள ரஜினி பெங்களூருவிற்கு விரைந்துள்ளார்.
சிறு வயதிலேயே தாய் தகப்பனை இழந்த நடிகர் ரஜினிகாந்தை அவரது, அண்ணன் சத்தியநாயாராணராவும், அவரது மனைவி கலாவதிபாயும்தான் பெற்ற பிள்ளையை போல வளர்த்தனர்.
 
ரஜினி பஸ் கண்டக்டராக இருந்த போதும் சரி, அவர் சினிமா வாய்ப்பைத் தேடி சென்னைக்கு வரும் போதும் சரி, அவரின் அண்ணனும், அண்ணியும் ரஜினிக்கு உறுதுணையாய் இருந்தனர். குடும்ப நிகழ்வுக்ளைப் பற்றியும் மற்றும் இதர விஷயங்களையும் அவர்களிடம் கருத்து கேட்ட பின்னரே ரஜினி முடிவெடுப்பாராம். அவர்களுக்குள் அப்படியொரு பரஸ்பர ஒற்றுமையாம்.
இந்நிலையில் அண்ணி கலாவதிபாய் சர்க்கரை நோய், சிறுநீரக கோளாறு போன்ற கோளாறுகளால் பெங்களூருவில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்றிரவு கலாவதிபாய்க்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவர்கள் எவ்வளவோ போராடியும் அவரை காப்பாற்ற முடியவில்லை. இதனால் இரவு 11.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.
 
அண்ணியின் இறந்த தகவல் கேட்ட ரஜினி அதிர்ச்சியடைந்தார். பின் உடனடியாக ரஜினிகாந்த் குடும்பத்தினருடன் பெங்களூருவிற்கு புறப்பட்டு சென்றார். கலாவதிபாயின் இறுதிசடங்கு இன்று மாலை நடக்கும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

ஓபிஎஸ், பிரேமலதாவை அடுத்து முதல்வரை சந்திக்கிறாரா ராமதாஸ்.. விரிவாகி வரும் திமுக கூட்டணி?

பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து.. அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி! - நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்!

மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைவு.. இன்னும் குறைய வாய்ப்பு என தகவல்..!

வந்தேண்டா பால்காரன்..! மாட்டுத்தொழுவத்தை இடித்த எம்.எல்.ஏ.. அண்ணாமலை ரஜினி ஸ்டைலில் சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments