Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எச்.ராஜா, கமலை எதிர்த்து தேர்தலில் ஜெயிக்க முடியுமா? விளாசும் நடிகர்!

எச்.ராஜா, கமலை எதிர்த்து தேர்தலில் ஜெயிக்க முடியுமா? விளாசும் நடிகர்!

Webdunia
வெள்ளி, 21 ஜூலை 2017 (09:27 IST)
நடிகர் கமல்ஹாசன் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து அவரை முதுகெலும்பில்லாத கோழை என விமர்சித்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவை காமெடி நடிகர் மயில்சாமி கடுமையாக சாடியுள்ளார்.


 
 
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து இரண்டாம் கட்டமாக போராடும் நெடுவாசல் போராட்டத்தில் கலந்துகொள்ள வந்த காமெடி நடிகர் மயில்சாமியிடம் செய்தியாளர்கள் போராட்டத்தை சிலர் தூண்டி விடுவதாக எச்.ராஜா கூறியுள்ளாரே என கேள்வி எழுப்பினர்.
 
இதற்கு பதில் அளித்த நடிகர் மயில்சாமி யாருங்க இந்த எச்.ராஜா, அவர முதல்ல ஒரு தேர்தல்ல நின்னு ஜெயிச்சிட்டு வர சொல்லுங்க என்றார். மேலும் நடிகர் கமலை பற்றி பேச எச்.ராஜாவுக்கு என்ன தகுதி இருக்கிறது. எச்.ராஜா தேர்தல்ல நிற்கட்டும் அந்த தொகுதியில் கமலை நிறுத்துகிறேன் ஜெயிக்க முடியுமா என மயில்சாமி கேள்வி எழுப்பினார்.
 
நெடுவாசல் பிரச்சனைக்காக கமல் என்ன செய்தார் என எச்.ராஜா கூறியுள்ளது பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த மயில்சாமி, இலங்கை தமிழர் பிரச்சணைக்காக கமல் வேனில் நின்று பேசியதை நானே பார்த்திருக்கிறேன். ஒரு நடிகன் நேரடியாக வர வேண்டிய அவசியம் இல்லை, ஒரு அறிக்கையே போதுமானது என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் இருக்கக் கூடாது : பிரதமர் மோடி

வாட்ஸ் அப்பில் பாகிஸ்தான் உளவுத்துறையினர்.. பொதுமக்களுக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை..!

உபியில் 17 குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயர்.. பெற்றோர் மகிழ்ச்சி..!

சீன தயாரிப்புகளை நம்பி ஏமாந்த பாகிஸ்தான்.. சீனாவுக்கும் ஆப்பு வைத்த ஆபரேஷன் சிந்தூர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments