Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரையில் பிரபல நடிகரின் சகோதரர் கைது

Webdunia
திங்கள், 12 அக்டோபர் 2015 (03:40 IST)
மதுரை விமான நிலையத்தில் துப்பாக்கி தோட்டாக்களுடன் வந்த பிரபல நடிகர் கார்த்திக் சகோதரர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
 

 
நடிகர் கார்த்திக் சகோதரர் கணேஷ் (57). இவர் சென்னையில் வசித்து வருகிறார். ஆனால், குளுகுளு கோடை வாசஸ்தலமான கொடைக்கானலில் ஓட்டல் வைத்துள்ளார்.
 
இந்த நிலையில், இவர், கொடைக்கானலில் இருந்து சென்னை செல்ல, மதுரை விமான நிலையம் வந்தார். விமான நிலையத்தில் வழக்கம் போல் அவரது உடைமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தனர்.
 
அப்போது அவரது கைப்பையில் துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தது கண்டு திடுக்கிட்டனர். பின்பு அவரை பெருங்குடி காவல்  நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, அவர் இது என கைப்பை அல்ல. நடிகர் கார்திக் உடையது. அதில் துப்பாக்கி தோட்டா இருப்பது தெரியாது என வாதாடினார். ஆனால், இதை ஏற்க மறுத்த போலீசார், கணேசை கைது செய்தனர். பின்பு ஜாமீனில் விடுதலை செய்தனர். 

இந்த சம்பவத்தால் மதுரை மற்றும் சென்னையில் உள்ள திரையுலகத்தினர் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவியது.

நிதி நிறுவனங்களில் 72 மணி நேரம் சோதனை.! ரூ.170 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்.!!

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஒத்திவைப்பு.! பயணிகள் ஏமாற்றம்.!!

டீசல் பரோட்டாவா? என்ன கருமம் இது!? – வைரலான வீடியோ! மன்னிப்பு கேட்ட யூட்யூபர்!

ஜம்முவில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி..! நான்கு பேர் சுட்டு கொலை..!!

மனிதன் உணர்ந்து கொள்ள இது உண்மையான தேர்தல் அல்ல..!அதையும் தாண்டி கொடூரமானது.! நடிகர் மன்சூர் அலிகான்..!!

Show comments