Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவுதமி.. நீ தூரமாகி விட்டாய் - கமல்ஹாசன் அறிக்கை

கவுதமி.. நீ தூரமாகி விட்டாய் - கமல்ஹாசன் அறிக்கை

Webdunia
புதன், 2 நவம்பர் 2016 (11:29 IST)
நடிகை கவுதமி உடனான பிரிவு குறித்து நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளதாக ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது.


 

 
அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
கவுதமி மறக்க முடியாத ஒரு மரபுக் கவிதை. சேர்வதும் செல்வதும் தனிப்பட்ட தகவு. வேற்றுமையில் இருந்த ஒற்றுமை விலகிச் செல்வதில் வீணாகிவிடுவதில்லை என்ற விபரீதக் கொள்கை உடையவன் நான். 
 
என் மீது விழும் எச்சம் உன்மீதும் விழாது என்று சொல்வதில் எனக்கு எந்தப் பெருமையும் கிடையாது. என்னுடன் இருந்த தனிப்பட்ட சந்தோஷம் இன்றும் என்னுடன் கைகோர்த்துக் கொண்டு வரும் என்பதில் வருத்தமில்லை. 
 
விலகிச் செல்வதால் நீ வீரியமாய் வளர்ந்துவிடுவாய் என்றால், அதுவே உன் விருப்பம் என்றால் தூரமாய் தனியாய் நிழலாய் இருந்துவிடு. என் தட்டில் வந்துவிழுவதை நான்தானே தீர்மானிக்க வேண்டும். தட்டிலிருந்து விழும் மற்ற மலங்களைப் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும்? 
 
தூரமாய் இருந்தால் நல்லது என்று நீயே தீர்மானித்தாய். நீயே தூரமாகிவிட்டாய். இருந்தும் என்னுள் நானே எனக்கு விதித்த தண்டனை என்று சொல்லமாட்டேன். எனக்குள் இருக்கும் இன்னொரு வடிவம் இன்று சற்று விலகி வீழ்ந்துவிட்டது என்று சொல்வதில் தனிப்பட்ட பெருமை இல்லை. 
 
ஏனெனில் நீயே உனக்குள் தனிமரம் என்ற வனாந்தரத்தில் வசந்தமாய் வளர்ந்துவிட்டாய். உனக்குள் என்றும் அன்புடன் 
 
கமல்.
 
என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதை கமல்தான் வெளியிட்டாரா இல்லை வேறு யாராவது வெளியிட்டார்களா என்று தெரியவில்லை என்று சமூக வலைத்தளங்களில் சந்தேகங்கள் பரவி வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை! திருத்தப்பட்ட அரசாணை வெளியீடு!

பூந்தமல்லி - போரூர் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்: விரைவில் 2-ம் கட்ட சோதனை..!

கூடாரத்தை கொழுத்திய இஸ்ரேல்! உடல் கருகி பலியான 23 பாலஸ்தீன மக்கள்! - தொடரும் சோகம்!

மதபோதகரை எரித்துக் கொன்ற சம்பவம்! குற்றவாளி விடுதலை! - கொண்டாடிய விஷ்வ ஹிந்து பரிஷத்!

திருமணமான 4 மாதத்தில் கணவனை பீர் பாட்டிலால் கொலை செய்த 17 வயது மைனர் மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments