Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதைத்தான் முக்கிய அறிவிப்பு என கமல்ஹாசன் கூறினாரா?

Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2017 (13:29 IST)
நடிகர் கமல்ஹாசன் தனது பிறந்தநாளான நவம்பர் 7ம் தேதி முக்கிய அறிவிப்பை அறிவிப்பேன் என அறிவித்துள்ளார்.


 

 
நடிகர் கமல்ஹாசன் விரைவில் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்நிலையில் ஒரு செய்திதாளுக்கு அவர் அளித்த பேட்டியில் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
 
செய்வார்கள் என காத்திருந்தது போதும். நம்மால் முடியும். கடமையை செய்ய விரும்புபவர்கள் வாருங்கள். இளைஞர்களை ஒன்றிணைக்க வேண்டிய தருணம் இது. கடமையை செய்ய யார் முன்வந்தாலும் அவர்களை இருகரம் கூப்பி வரவேற்கிறேன். பல்வேறு இயக்கங்கள் நம்முடன் இணைந்து செயல்பட தயாராக இருக்கிறார்கள். வாருங்கள். நியாயத்தூள் கிளப்புவோம்” என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
 
எனவே, அவர் விரைவில் ஒரு அரசியல் இயக்கத்தை தொடங்குவார் எனவும், அதற்கான அறிவிப்பே அவரது பிறந்தநாளன்று வெளியாகும் என பெரும்பாலானோரால் நம்பப்பட்டு வருகிறது.
 
ஆனால், தனது ஆதரவாளர்களை ஒன்றிணைப்பதற்கான ஒரு மொபைல் ஆப்-பை மட்டுமே அவர் நவம்பர் 7ம் தேதி வெளியிட இருக்கிறார் எனவும், அதற்கான ஏற்பாடுகள்தான் தீவிரமாக நடைபெற்று வருகிறது என ஒரு செய்தி வெளியே கசிந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

டெல்லியில் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை.. யார் யார் கலந்து கொண்டார்கள்?

கேரளாவில் இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

3 நாள் தியானத்தை முடித்தார் பிரதமர் மோடி..! திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை.!!

சார்பதிவாளர்-அலுவலக உதவி ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு!

சென்னையில் மின் தேவை புதிய உச்சம்.! மின்தடைக்கு காரணம் என்ன.? மின்வாரியம் விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments