Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீட்டாவை வெளுத்து வாங்கிய ஜெயம் ரவி: டுவிட்டரில் வீடியோ வெளியீடு!

பீட்டாவை வெளுத்து வாங்கிய ஜெயம் ரவி: டுவிட்டரில் வீடியோ வெளியீடு!

Webdunia
வியாழன், 19 ஜனவரி 2017 (09:21 IST)
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. திரையுலக நடிகர்கள் இயக்குனர்கள் என பலரையும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான நிலைக்கு கொண்டு வந்துள்ளது இளைஞர்களின் போராட்டங்கள்.


 
 
பீட்டா அமைப்பில் இருக்கும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக இருந்தவர்கள் கூட இன்று ஆதரவான நிலைப்பட்டை எடுத்துள்ளனர். அந்த அளவுக்கு போராட்டத்தின் தீவிரத்தன்மை உள்ளது. ஒட்டுமொத்த திரையுலகமும் ஒருவ்வொருவராக தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடத்தி வரும் போரட்டங்கள் பாராட்டுக்குறியது என டுவிட்டரில் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, தற்போது தலக்கோணம் காட்டு பகுதியில் படப்பிடிப்பில் உள்ளேன், சென்னை வந்தவுடன் நானும் கலந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன் என்றார்.

 
மேலும் பீட்டா அமைப்பு ஏன் இந்த குதிரை பந்தியத்தை தடை செய்யவில்லை. குதிரை பந்தயத்தில் குதிரைகள் வதைக்கப்படுவதை பற்றி ஏன் பேசவில்லை, பணம் விளையாடுவதால் தான் இந்த பீட்டா பேசவில்லையா என்று தோன்றுகிறது.
 
இது வன்முறையான போராட்டம் கிடையாது, அரசியல் சார்ந்த போராட்டமும் இல்லை, கூடிய விரைவில் ஒரு நல்ல தகவல் கிடைக்கும் என்று நம்புகிறோம் என்று வீடியோ வெளியிட்டுள்ளார்.
 

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments