Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் 12வது சர்வதேச இயந்திரங்கள், உதிரிப்பாகங்கள் கண்காட்சி

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2016 (06:01 IST)
சென்னை வர்த்தக மையத்தில் வியாழக்கிழமை சர்வதேச அளவிலான இயந்திரங்கள், உதிரிப்பாகங்கள் கண்காட்சி தொடங்கியது.
 


 

 
சென்னையில் சிறு, குறு தொழிற்சாலைகளில் நவீன பொறியியல் இயந்திரங்கள், உதிரிப்பாகங்கள் பயன்படுத்தி உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்திலும், தொழிற்சாலை உரிமையாளர்களுக்கும் நல்லுறவை வளர்க்கும் வகையில் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை சர்வதேச அளவிலான கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
 
அதுபோல அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் 12வது சர்வதேச அளவில் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த இயந்திரங்கள், உதிரிபாகங்களின் கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக வளாக மையத்தில் வியாழக்கிழமை தொடங்கி, தொடர்ந்து 20-ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.
 
இந்தக் கண்காட்சியில் 450 பிரபல நிறுவனங்களின் விமானம், வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் உற்பத்திக்கான நவீன ரக பொறியியல் இயந்திரங்கள், அதில் தயார் செய்யப்படும் உதிரிபாகங்களும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.
 
பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொறியியல் தொடர்பான உதிரிபாகங்கள் தயார் செய்யும் தொழிற்சாலைகளைச் சேர்ந்த உரிமையாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் ஆர்வத்துடன் வருகை தருகின்றனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் பொங்கல் தினத்தில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

சரணடையும் நக்ஸலைட்டுகளுக்கு லட்சக்கணக்கில் சன்மானம்! - சாதித்து காட்டிய சத்தீஸ்கர்!

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments