Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: விழுப்புரம் பகுதியில் அண்ணாமலை நேரில் ஆய்வு..!

Mahendran
செவ்வாய், 3 டிசம்பர் 2024 (11:49 IST)
விழுப்புரம் மாவட்டத்தில் கேன்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அண்ணாமலை நேரில் ஆய்வு செய்ததாகவும் அந்த பகுதி மக்களிடம் நேரில் அவர் குறைகளை கேட்டு அறிந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

வங்க கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மையம் கேன்சல் புயலாக மாறி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை மற்றும் புதுவை ஆகிய பகுதிகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. புயல் கடந்த பின்னரும் இந்த பகுதிகளில் கன மழை பெய்து வருவதாகவும் இதனால் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்த நிலையில் தற்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் ஆய்வு செய்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் ஆய்வு செய்ததாகவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை சந்தித்து குறைகளை கேட்டு அறிந்ததாகவும் தருகிறது. மேலும், உப்பளம் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் ஐசிஐசிஐ வங்கி சிஇஓ சந்தா கோச்சார் குற்றவாளி தான்; தீர்ப்பாயம் அதிரடி அறிவிப்பு..!

கைது செய்யாம இருக்க பணம் குடுங்க! ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வழக்கில் ரூ.50 லட்சம் வாங்கிய போலீஸ்!? - பகீர் குற்றச்சாட்டு!

சென்னையில் அதிகரிக்கும் டெங்கு: புள்ளிவிவரங்கள் எச்சரிக்கை!

முதல்வர் உடல்நலக்குறைவுக்கு என்ன காரணம்? துணை முதல்வர் உதயநிதி விளக்கம்..!

எந்த வேலையையும் நிறுத்தக் கூடாது! அப்பல்லோவில் இருந்தபடியே ஆலோசனை செய்யும் மு.க.ஸ்டாலின்!

அடுத்த கட்டுரையில்
Show comments