Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதாா் எண்ணை இணைக்காத வீடுகளுக்கு மின்வாரிய ஊழியா்கள் நேரில் சென்று ஆய்வு

Webdunia
வெள்ளி, 17 மார்ச் 2023 (15:40 IST)
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக அரசின் மின்சார வாரியம் தெரிவித்திருந்தது என்பதும் பிப்ரவரி 28 இதற்கான கடைசி தேதி என அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடைசி தேதி முடிவடைந்த பின்னரும் இன்னும் ஒரு சிலர் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்காமல் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மின்வாரியத்தை தகவலின்படி இன்னும் 67 ஆயிரம் பேர் ஆதாரை இணைக்காமல் உள்ளனர் என்பதை அடுத்து இந்த எண்களை இணைக்காத நுகர்வோரின் பட்டியல் தயார் செய்யப்பட்டதாகவும் அவர்களை வீடுகளுக்கு நேரடியாக அந்தந்த பகுதிக்கு உட்பட்ட மின்வாரிய ஊழியர்கள் சென்று ஆதார் மின் இணைப்பு எண்களை இணைக்க அறிவுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
வெளிநாடுகளில் வாசிப்போர் பலர் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ளார்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட வீடுகளில் வசிப்பவர்கள் அல்லது சம்பந்தப்பட்ட நபர்களை தொடர்பு கொண்டு இது குறித்து அறிவுறுத்தி வருவதாகவும் மின்சார வாரியத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
மேலும் சில வீட்டு உரிமையாளர்கள் இறந்து விட்டதால் அவர்களின் மின் இணைப்பு எண்ணுடன் யாருடைய ஆதார் எண்ணை இணைப்பது என்பது குறித்து வாரிசுதாரர்களுக்கிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் இணைக்காமல் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments