Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதவ் அர்ஜுனாவிற்கு மாநில பொறுப்பு.. தவெக தலைவர் விஜய் முடிவா?

Siva
வியாழன், 30 ஜனவரி 2025 (07:58 IST)
ஆதவ் அர்ஜுனாவுக்கு தமிழக வெற்றி கழகத்தின் கட்சியில் மாநில அளவிலான பொறுப்பு வழங்கப்பட இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில், இந்த கட்சியில் வேறு கட்சியிலிருந்து எந்த பிரபலங்களும் இதுவரை இணையவில்லை.
 
இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா, அந்த கட்சியில் இருந்து விலகிய நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாக கூறப்பட்டது. அதுமட்டுமின்றி, அவருடைய "வாய்ஸ் ஆப் காமன்" என்ற நிறுவனம்தான் தேர்தல் ஆலோசகராக தமிழக வெற்றி கழகத்தில் இருக்கப்போவதாகவும் கூறப்பட்டது.
 
இந்த நிலையில், நேற்று விஜய் - ஆதவ் அர்ஜுனா சந்திப்பு நடந்ததாகவும், இந்த சந்திப்பின்போது சில முக்கிய ஆலோசனைகள் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், ஆதவ் அர்ஜுனாவுக்கு தமிழக வெற்றி கழகத்தில் மாநில அளவில் ஒரு பதவி வழங்க இருப்பதாகவும், குறிப்பாக இணை அல்லது துணை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேஷனல் ஹெரால்டு விவகாரம்: நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்..!

மக்களின் குறைகளை நிறைவேற்ற வக்கில்லாத திமுக அரசு, ஒரு Coma அரசு! ஈபிஎஸ் ஆவேசம்..!

உயிரினங்கள் வாழும் பிரம்மாண்ட கிரகம்! கண்டுபிடித்து உலகிற்கு சொன்ன இந்திய வம்சாவளி விஞ்ஞானி!

மோடியை அடுத்து அமெரிக்காவுக்கு செல்லும் நிர்மலா சீதாராமன்.. டிரம்ப் உடன் சந்திப்பு இல்லையா?

தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை போக்குவரத்து மாற்றம்.. மாற்று வழிகள் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments