Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு கேட்டதற்காக மன்னிப்பு கேட்ட இளம்பெண்!

Webdunia
வெள்ளி, 1 நவம்பர் 2019 (19:50 IST)
சீமானின் நாம் தமிழர் கட்சி ஆரம்பித்து பத்து வருடங்களுக்கு மேலாகியும், இன்னும் அந்த கட்சி ஒரு தொகுதியில் கூட டெபாசிட் கூட பெற முடியவில்லை. சீமானின் பொதுக்கூட்டத்திற்கு ஆயிரக்கணக்கானோர் வருகை தந்தாலும் அவர்களில் ஒரு சிலர் கூட சீமான் கட்சிக்கு வாக்களிக்க வில்லை என்பதைத் தான் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன 
 
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற விக்கிரவாண்டி மட்டும் நாங்குநேரி அருகே சட்டப்பேரவைத் தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்த கல்பனா என்ற இளம்பெண் தற்போது சீமானின் கட்சியிலிருந்து விலகி உள்ளார் 
 
ஈழம் குறித்த நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளை கவர்ந்துதான் அந்த கட்சியில் தான் சேர்ந்ததாகவும் ஆனால் தற்போது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையை நியாயப்படுத்திய்தோடு அந்த கொலையை நாங்கள்தான் செய்தோம் என்று சீமான் கூறியிருப்பது தனது உடன்பாடு இல்லை என்பதால் அந்த கட்சியில் இருந்து விலகுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் நாம் தமிழர் கட்சிக்காக தான் வாக்கு கேட்டு சென்ற போது தன்னுடைய பேச்சை கேட்டு வாக்களித்த அனைவரிடமும் தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
 
மேலும் சீமானின் நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளும் சீமான் நடந்து கொள்ளும் விதமும் முரண்பாடாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments